ஒரு சொல்: ‘காற்றும் நீரும் மோதியதுண்டா..?’



இந்தப் பூமியில், மனிதனின் வாழ்வியல் தொடங்கியதன் காலக்கட்டத்தை கணிப்பது கடினமானது.

ஆயினும், மனித வாழ்வு தொடங்கிய அந்த நாளிலிருந்து இன்றுவரை என்றுமே

·         சந்திரன் பூமியை உரசியதில்லை!

·         பூமி, சூரியனுடன் மோதியதில்லை!

·         இரவு பகலின் நேரங்களில் வேறுபாடு கண்டதில்லை.

·         காற்று, நீரோடு என்றும் கலகம் புரிந்ததில்லை.

·         மண்ணிடம் தண்ணீர் முகம் சுளித்ததில்லை.

·         வெப்பமும் நெருப்புடன் உள்ள நட்புறவை முறித்துக் கொண்டதில்லை!

இவை எல்லாம் சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஏன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன? அவற்றுக்கிடையே ஏன் பிணக்கு வருவதில்லை? மோதல் போக்குகள் ஏன் காணப்படுவதில்லை? இவை கட்டுண்டுக் கிடப்பதின் ரகசியம்தான் என்ன?

இந்த கேள்விக்குரிய பதில்களை உங்கள் இதயத்திடம் உரசவிடுங்கள்!

இந்த பிரபஞ்ச படைப்பினங்கள் அனைத்தும் ஒரே ஓர் சக்தியிடம்.. அந்த மாபெரும் வல்லமை வாய்ந்த பரம்பொருளிடம் கட்டுண்டுக் கிடக்கின்றன! அந்த மகா சக்தியின் ஆணைகளுக்கு அடிபணிந்து நடக்கின்றன. உலக சக்திகள் அனைத்தும் அந்த படைப்பாளனின் கைப்பிடிக்குள் அடங்கி.. ஒடுங்கியிருக்கின்றன என்று உங்கள் உள்ளம் சான்று பகராமல் இருக்க முடியுமா?

இந்த உலகின் உரிமையாளராக பத்து .... இருபது என்ன..? ஓரிரு தெய்வங்கள் இருந்தால்கூட இந்த பிரபஞ்சயியல் நிர்வாகம் ஒழுங்குபட்டிருக்க வாய்பேயில்லை என்று உங்கள் அடிமனது சாட்சி கூறாமலிருக்க முடியுமா?

ஒரு சிறு பள்ளிக்கூடத்தின் நிர்வாகம் கூட இரு தலைமையாசிரியர்கள் கீழ் இயங்க முடியாதபோது, பரந்து.. விரிந்துள்ள இந்த பால்வெளி பெரும் அண்டம்..  எப்படி பல தெய்வங்களின் அதிகாரத்தில் இயங்க முடியும்?

-    மௌலான மௌதூதி (ரஹ்)

Related

ஒரு சொல் 2454368099413278743

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress