ஒரு சொல்: 'இஸ்லாத்தில் ஆன்மிகம்'




ஆன்மாவின் வளர்ச்சி அல்லது அழிவு பற்றி தீர்மானிப்பதற்கு இஸ்லாம் கொடுத்துள்ள அடிப்படை அளவுகோல் என்ன?

மனிதன் இறைவனின் பிரதிநிதி – கலீஃபா – என்னும் பிரதிநிதித்துவ தத்துவத்தில் இந்தக் கேள்விக்குரிய விடை இருக்கிறது.

இறைவனின் பிரதிநிதி என்னும் முறையில் தன் நடவடிக்கைகள் அனைத்திற்கும் இறைவனிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்தான் மனிதன்.

இந்த உலகில் தனக்கு அளிக்கப்பட்ட எல்லா அதிகாரங்களையும்,

தன் உபயோகத்திற்காக வழங்கப்பட்ட எல்லாச் சாதனங்களையும் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டியது மனிதனின் கடமையாகும்.

இறைவனின் பாராட்டைப் பெறுவதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட திறமைகளையும், சக்திகளையும் முழு வீச்சில் அவன் உபயோகப்படுத்தியாக வேண்டும்.

மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் விஷயத்தில் இறைவனால்.. ஏற்றுக் கொள்ளப்பட்ட போக்கை அவன் கடைப் பிடிக்க வேண்டும்.

சுருக்கமாக, இந்த உலக விவகாரங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று இறைவன் விரும்புகின்றானோ அவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துவதிலேயே அவனுடைய எல்லா முயற்சிகளும் .. சக்திகளும்.. செலவிடப்பட வேண்டும்.

பாராட்டத்தக்க முறையிலும், பொறுப்புணர்வோடும், அடக்கத்துடனும் தனது அதிபதியான இறைவனின் திருப்தியைப் பெறும் குறிக்கோளுடனும் எவன் இந்தத் திருப்பணியைச் செவ்வனே செய்து முடிக்கின்றானோ அவனே இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக இருப்பான். இஸ்லாத்தில் ஆன்மிக வளர்ச்சி என்பதும் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது என்பதும் ஒன்றுதான்.

இதற்கு மாறாக, சோம்பேறியாகவும் உணர்வற்றவனாகவும், வரம்பு மீறுவோனாகவும், கீழ்ப்படியாதவனாகவும் எவன் இருக்கின்றானோ அவன் இறைவனைவிட்டு வெகுதொலைவில் இருக்கின்றான் என்றே பொருள். இறைவனை விட்டு வெகு தொலைவில் இருத்தல் என்பது ஆன்மிக வீழ்ச்சியையும்.. அழிவையையும் குறிக்கும்.

- மௌலானா மௌதூதி (ரஹ்)

-   

Related

ஒரு சொல் 2428217946903298603

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress