ஆன்மிகச் சிந்தனை: 'வழிபாட்டு வழிகள்'


நபிகளாரின் வணக்க முறைகள் எவ்வாறு இருந்தன என்பதை அவர்களின் துணைவியாரிடம் மூவர் கேட்டறிந்தனர்.

இறைத்தூதரின் இறைவழிபாடுகள் குறைவாக இருப்பதாக அவர்கள் கருதினர்.

“பெருமானார் பாவம் செய்யாதவர்களாயிற்றே! நாமோ பாவம் செய்யாதவரல்லர்!” – என எண்ணினர்.

மூவரில் ஒருவர் கூறினார்: “இனி நான் இரவுகளில் உறங்காமல் இரவு முழுவதும் உபரியான (கடமைக்கும் அதிகமான) வணக்கங்களில் கழிக்கப் போகிறேன்!”

இரண்டாமவர், “இனி நான் இடைவிடாமல் உபரியான நோன்பு நோற்கப் போகிறேன். பகலில் ஒருபோதும் சாப்பிட மாட்டேன்!” – என்றார்.

மூன்றாமவரோ, “நான் இல்லற இன்பத்திலிருந்து ஒதுங்கி இருக்கப் போகிறேன்! இனி ஒருகாலமும் மணம் செய்து கொள்ள மாட்டேன்!” – என்றார்.

இச்செய்தி நபிபெருமானாருக்கு எட்டியது.

நபித்தோழரை அழைத்து விசாரித்துவிட்டு அறிவுறுத்தினார்கள்: “தோழர்களே! நான் உங்களைவிட அதிகமாக இறைவனுக்கு அஞ்சக் கூடியவனாகவும், அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்பவனாகவும் இருக்கிறேன். 

ஆயினும், பாருங்கள்! நான் சில சமயம் உபரியான தொழுகைகளைத் தொழுகிறேன். தூங்கவும் செய்கிறேன். இன்னும் பாருங்கள், நான் மணம் முடித்தும் உள்ளேன்.

எனவே, எனது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்தான் உங்களுக்கு நன்மையுண்டு!”

நடுத்தரப் போக்குடன் மனிதன் வாழ வேண்டும் என்பதே அண்ணல் நபியின் வழிமுறையாகவும், போதனையாகவும் இருந்தது. 

தீவிரமான கடினப் போக்குகளில் நபி பெருமானாருக்கு உடன்பாடில்லை; அது அவர்களின் வழிமுறையாகவும் இல்லை.

- தினமணி, ஆன்மிகச் சிந்தனைப் பகுதியில் 19.05.1995 அன்று பிரசுரமானது.

Related

ஆன்மிகச் சிந்தனை 1444780684251910147

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress