ஒரு சொல்: 'கேளுங்கள் கிடைக்கும்! தேடுங்கள் வழி பிறக்கும்!'


நமது கொள்கை என்ன? நமது நடத்தை எப்படி அமைய வேண்டும்? நமது நல்லொழுக்கப் பண்புகள் எப்படி இருக்க வேண்டும்? வணிகத் தொடர்புகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? நட்பிலும், பகைமையிலும் எந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்? நமக்கும், மற்றவர்களுக்கும் இருக்கும் கடமைகள் யாவை? அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? 

சத்தியம் எது? அசத்தியம் எது? எதை நாம் பின்பற்ற வேண்டும்? எதை நாம் விட்டுவிட வேண்டும்? யாருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்? யாருடன்  தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது? நமக்கு நண்பர் யார்? பகைவர் யார்? நமக்கு கண்ணியமும், வெற்றியும், நற்பயனும் எதில் இருக்கின்றன? கேவலமும், ஏமாற்றமும், நஷ்டமும் எதில் கிடைக்கின்றன?' என்றெல்லாம் அவர்கள் திருக்குர்ஆனிடம் கேட்பதில்லை.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வை திருக்குர்ஆனில் தேடுவதை இன்று முஸ்லிம்கள் விட்டுவிட்டார்கள். உலகாயதவாதி, நாத்திகர், இணைவைப்பவர், இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், தம்முடைய உள்ளத்திற்குள்ளே மறைந்திருக்கின்ற 'ஷைத்தான்' ஆகியவர்களிடம் இந்தப் பிரச்னைகளைப் பற்றி இன்று முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள். அவர்கள் அளிக்கும் ஆலோசனைகள்படியே நடக்கவும் செய்கிறார்கள். 

எனவே இறைவனை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ, அதே விளைவு இன்று ஏற்பட்டுவிட்டது. இந்தியா, சீனா, ஜாவா, பலஸ்தீனம், அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய எல்லா இடங்களிலும் அதே விளைவுகள்தான் இன்று முஸ்லிம்களை வஞ்சம் தீர்த்துக்  கொண்டிருக்கிறது.

- மௌலானா மௌதூதி (ரஹ்)



Related

ஒரு சொல் 8801340692633512998

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress