ஒரு சொல்: 'துளி நீரா கேட்போம் நாம்?'


திருக்குர்ஆன் நன்மைகள் அனைத்திற்கும் ஊற்றாகும். எவ்வளவு நன்மைகளை அதனிடம் கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளல் அது. 

ஜின்னையும், பூதத்தையும் விரட்டலாம். நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். வழக்கிலும் வெல்லலாம். வாழ்வின் பிரச்னைகள் அனைத்திலும் தீர்வு காணலாம். எல்லாமும் தரும் திருக்குர்ஆன் இல்லையென்று சொல்லாமல். இத்தகைய சிறு நன்மைகளை, முக்கியத்துவமற்ற அற்பப் பொருட்களை திருக்குர்ஆனிடம் கேட்டால்  அவைதாம் உங்களுக்குக் கிடைக்கும்.

அதேநேரத்தில் கண்ணியத்தையும், விண்ணளாவிய வெற்றியையும் ஏன்.. மண்ணகத்து தலைமைப் பதவியையும் திருக்குர்ஆனிடம் கேட்டால்  அதையும் அடைய முடியும். 

இன்னும் இறைவனின் திருசந்நிதியின் நெருக்கமான 'அர்ஷ்' என்னும் அரியணைக்கு அருகில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அங்கேயும் கொண்டு சேர்க்கும் வல்லமையுள்ளது திருக்குர்ஆன். 

நாம் எதனைக் கேட்கிறோம் என்பது நமது கொள்திறனைப் பொறுத்தது. 

ஆம்.. வாரி வாரி வழங்க மகா சமுத்திரம் முன்வரும் நிலையில் ஒரு துளி நீரா கேட்போம் நாம்?

- மௌலானா மௌதூதி (ரஹ்)


Related

ஒரு சொல் 1609679495805922971

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress