ஒரு சொல்: 'எல்லைக்கோடு!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_13.html
இறைவனின் வாக்கு எனப்படும் திருக்குர்ஆனையும், அவனது திருத்தூதரின் நடைமுறையையும், உண்மைக்கும் - நேர்மைக்கும் உரைகல்லாகக் கொண்டு, அவற்றிற்கு முரண்பட்டவை அனைத்தையும் தவறானவை, அசத்தியமானவை என்று விட்டுவிடுவதுதான் இஸ்லாத்தின் எல்லைக்கோடு!
இந்த எல்லைக் கோட்டுக்குள் இருக்கிற மனிதனே முஸ்லிம்! இந்த எல்லைக்கு வெளியே கால் வைத்ததும் மனிதன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விடுகின்றான். இதற்கு பிறகு தன்னை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டால், தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் தன்னையும், உலகத்தையும் ஏமாற்றுகின்றான் என்றே பொருள்.
"எவர்கள் இறைவன் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்!" (5:44) என்கிறது திருக்குர்ஆன் இந்த அளவுக்கோலை துல்லியமாக்கி!
- மெளலானா மௌதூதி (ரஹ்)

