ஒரு சொல்: 'இப்படிதான் வாழ வேண்டும் வாழ்க்கை!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_24.html
இதன் மூலம், 'அன்பு நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்றும், அவர்கள் மூலமாகவே இறைவன் உங்களுக்கு தன் சட்டங்களை அனுப்பியிருக்கிறான் என்றும்' நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் என்றே பொருள்.
இறைவனை உங்களுடைய எஜமானனாகவும், பேரரசனாகவும், ஒப்புக் கொண்ட பிறகு நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை:
- அந்த பேரரசனின் கட்டளைகள் என்ன?
- எந்தச் செயலைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான்?
- எந்தச் செயலைச் செய்தால் அவன் வெறுப்படைவான்?
- எந்தச் சட்டத்தைப் புறக்கணிப்பதால் அவனுடைய தண்டனை கிடைக்கும்?
இவற்றுக்கு எல்லாம் தெளிவாக விளக்கங்களை சொல்ல இறைவன் நபிகளாரை தனது பிரதிநிதியாக, திருத்தூதராக நியமித்து அனுப்பினான்.
அன்பு நபிகளார் மூலமாகவே இறைவன் தனது வேதத்தை உங்களுக்கு அருளினான்.
இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப, 'ஒரு முஸ்லிம் இப்படிதான் வாழ வேண்டும்!" - என்று நபிகளார் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

