ஒரே கேள்வி: 'கார்டியன்கள் யாரும் இல்லை! எல்லோரும் 'ஃபாளோவர்ஸ்'தான் '

கேள்வி: முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பேராசிரியர் மார்க்ஸ் ஒருபால் உறவைப் பெரிதும் ஆதரித்து  எழுதியுள்ளதால் முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவரைக் காய்ச்சி எடுக்கிறார்கள். பேரா.மார்க்ஸ் மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல. அவரைப் போன்ற முற்போக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒருபால் உறவு, மது போன்றவற்றை ஆதரிப்பவர்கள்தாம். இப்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒருபால் உறவு, மது போன்ற ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் பேரா.மார்க்ஸ் போன்றவர்களைக் கண்டிக்க வேண்டுமா? அல்லது அவரின் மனித உரிமைப் பணிகளையும் முஸ்லிம் ஆதரவுப் போக்கையும் கவனதில் கொண்டு  கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட வேண்டுமா? இந்தக் கேள்விக்கு சமுதாயத்தின் பதில் என்ன?

பேராசிரியர் மார்க்ஸ்
பதில்: இந்த கேள்விக்கு பதில் காணும் முன், அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். ‘மோடிக்கு எதிராக அறிவு ஜீவிகளின் கருத்துருவாக்கக் கூட்டம் ஒன்று சமீபத்தில் சகோ. கொடிகால் செல்லப்பா அவர்களது தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளம் கிருத்துவ பாதிரியார் ஒருவர் நாடு எதிர்கொண்டிருக்கும் 'பாஸிஸ' பேராபத்து, அதனால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் அடையவிருக்கும் பிரச்னைகள் என்று பட்டியலிட்டு பேசினார்.

என்னை பேச சொன்ன போது எனது அனுபவ ரீதியான கருத்துக்களை எடுத்துரைத்துவிட்டு, “பிரச்னை முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அவர்கள் அச்சப்படவும் தேவையில்லை. தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாததால் சில ஆபத்துக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்! அதற்கான விலையும் ஈடு காண முடியாததுதான்! முஸ்லிம்கள் இந்த குறைபாட்டிலிருந்து வெளி வர வேண்டும். அதேசமயம், வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய விரோதிகளின் பிரச்னைகளின் தீப்பிழம்பிலேதான் இஸ்லாம் வேர்விட்டு வளர்ந்துள்ளது.

சரி.. நாட்டில் முஸ்லிம்களே இல்லை என்று வைத்துக் கொள்வோம். மோடியும் அவரது பின்புலமாய் நிற்கும் பாஸிஸமும் அடங்கிப் போய்விடும் என்று நினைக்கிறீர்களா? அடுத்தது, கிருத்துவர்கள், அதற்கடுத்தது தாழ்த்தப்பட்டவர்கள் என்று வர்ணாசிரம முறையை கட்டமைப்புக்குள் கொண்டு வரும்வரை அதன் மனித இன வரம்பு மீறல் அடங்காது! அதனால், பிரச்னை அனைவருக்கும் பொதுவானது என்று பேசுவோம்! ஒருங்கிணைவோம்!” - என்றேன்.

மேற்கண்ட கேள்விக்கான பெரும் பகுதி பதில் இதிலேயே அடங்கி உள்ளது.

பேரா. மார்க்ஸ் ஆகட்டும் அல்லது அதற்கு முன் இருந்த மர்ஹீம் ஷேக் அப்துல்லாஹ்வாகட்டும் அல்லது அதற்கு முன் இருந்த மர்ஹீம் அப்துல்லாஹ் அடியாராகட்டும் இஸ்லாத்தின் பாதையில் அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், அவர்களின் சொந்த நலன் சார்ந்தது அன்றி வேறில்லை.

அதேபோலதான், பேரா. மார்க்ஸ்ஸின் நிலைமையும்; அவர் சிறுபான்மையினருக்கு அளிக்கும் ஆதரவுகூட! இவையனைத்தும், அவரது நலன் சார்ந்தவைதான் என்றே நாம் கருதி மதிப்பளிக்க வேண்டும்; பிரச்னைகளை உள் வாங்க வேண்டும்.

அறிவுஜீவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. முரண்பாடுகள் உண்டு; உடன்பாடுகளும் உண்டு. ஆனால், இஸ்லாமும் அதன் போக்கும் மனிதர்களுக்குப் பொத்தாம் பொதுவானது. வளைந்து நெளியாதது. 

பேரன்போடு, பெரு நேசத்தோடு நவீன யுக வார்த்தைகள், உதாரணங்கள், பின்விளைவுகள் என்று அறிவு ஜீவிகளுக்கு விளக்க நாம் முன் வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இதுவும் அழைப்பியல் பணியின் அங்கம்தான்!

முரண்பாடுகள் என்று யாரையும் ஒதுக்க வேண்டிய அவசியமேயில்லை! அதேபோல, இஸ்லாத்தின் 'கார்டியன்கள்' என்று யாரும் இல்லை! எல்லோரும் இஸ்லாத்தின் 'ஃபாளோவர்ஸ்'தான் என்பதே உண்மை!

Related

ஒரே கேள்வி 4704915976072870997

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress