ஒரு சொல்:'விண்ணுயர வளர்ந்த மரம்; மண் மேல் நிற்கும் மரம்'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_16.html
'கலிமா தய்யிபா' என்னும் இஸ்லாத்தின் சத்தியப் பிரமாணம் பற்றி உங்களுக்குச் சிறிது விளக்கியிருந்தேன். இன்று அதே 'கலிமா'வை உங்களிடம் இன்னும் விரிவாக விளக்கப் போகின்றேன். ஏனென்றால், இந்தக் 'கலிமா'தான் இஸ்லாத்திற்க அடிப்படை. அதன் மூலமாகத்தான் மனிதன் இஸ்லாத்தில் நுழைகின்றான். அந்தக் 'கலிமா'வை நன்கு உணர்ந்து, அதற்கு தக்கபடி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்வரை எந்த மனிதனும் முஸ்லிமாக முடியாது.
இறைவன் தனது நூலில் அந்தக் 'கலிமா'வைப் பற்றி இப்படி விளக்குகின்றான்:
"நல்ல வார்த்தைக்கு - கலிமா தய்பிபாவுக்கு இறைவன் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப் பதிந்திருக்கிறது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; எந்த நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக இறைவன் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான். மேலும், கெட்ட வார்த்தைக்கு உவமை, ஒன்றுக்கும் உதவாத ஒரு மோசமான செடியைப் போன்றதாகும். அந்தச் செடி பூமியின் மேல்மட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்படுகின்றது. அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது!" (14:24,25)
- மௌலானா மௌதூதி (ரஹ்)


