அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 20: 'அதிஷ்டக்கார சிறுமி!'

உம்மு காதின் அப்பாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. மறு பக்கமோ கோபமாகவும் இருந்தது. நபிகளாருக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருந்தன. அப்படி இருக்கும் போது தனது மகள், நபிகளாரின் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றாளே!'
உண்மைதான்! இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபிகளாருக்கு (ஸல்) எவ்வளவோ வேலைகள் இருந்தன. அப்படியிருந்தும் சிறு சிறு விஷயங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். சிறியவர் முதல் பெரியவர்வரை நேசித்தார்கள்.

இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை..!' 'ஒர் அதிஷ்டகார சிறுமி'யைப் பற்றியது.


அப்பா சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டதும் 'உம்மு காத்' என்ற அந்தச் சிறுமிக்கு தலை - கால் புரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சி!

ஆமாம்.. உம்மு காத் ஒரு முக்கியமானவரை சந்திக்கப் போகிறாள். அதுவும் அன்பு நபிகளாரை..! மகிழ்ச்சி இருக்காதா பின்னே!

அந்த நேரமும் வந்தது.

நபிகளார் உம்மு காதைப் பார்த்தார்கள். அவளை அருகில் அழைத்தார்கள்.

காத்திருந்த சந்தர்ப்பம் ஆயிற்றே! விடுவாளா உம்மு காத்? ஓடிச் சென்று நபிகளாரின் அருகில் அமர்ந்து கொண்டாள். அவரிடம் விளையாடவும் செய்தாள்.

உம்மு காதின் அப்பாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபக்கமோ கோபமாகவும் இருந்தது.

நபிகளாருக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருந்தன. அப்படி இருக்கும்போது, தனது மகள் நபிகளாரின் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றாளே!

இதை அவர் நபிகளாரிடம் நாசூக்காக சொல்லவும் செய்தார்.

ஆனால், நபிகளார் அதை பொருட்படுத்தவில்லை.

உம்மு காத் அன்பு நபியுடன் நீண்ட நேரம் தங்கி மகிழ்ந்தாள்.

இது நடந்து சில நாட்கள் ஆகியிருக்கும்.

நண்பர்கள் சிலர் நபிகளாரைச் சந்திக்க வந்திருந்தார்கள்.

அவர்கள் அன்பு நபிக்கு சில அன்பளிப்புப் பொருட்களையும் கொண்டு வந்திருந்தார்கள்.அவற்றில் கண்ணைப் பறிக்கும் அழகிய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றும் இருந்தது.

"ஆஹா.. இந்தப் போர்வை எவ்வளவு அழகாய் இருக்கிறது? ம் .. இதை யாருக்குத் தரலாம்?" நபிகளார் தம்மைச் சுற்றியிருந்தோரிடம் கேட்டார்கள்.

அங்கிருந்தோர் யாரும் வாயைத் திறக்கவில்லை.

'அந்த போர்வை தங்களுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே..!'- என்று ஒவ்வொருவரும் ஏங்கினார்கள்.

ஆனால், அதை யாரும் வாய்த் திறந்து கேட்கவில்லை.

சிறிது நேரம் கழிந்திருக்கும்.


"ஆங்.. உம்மு காத்.. அவளுக்குத்தான் இது. உம்மு காதை உடனே அழைத்து வாருங்கள். இந்தப் போர்வை அவளுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்!" என்றார்கள் நபிகளார்.

இதைக் கேட்டதும் சிலர் உம்மு காதின் வீட்டுக்கு ஓடினார்கள். நடந்ததை அவளிடம் தெரிவித்தார்கள். அவளை கையோடு அழைத்துவந்தார்கள்.

உம்மு காத் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போனாள்.

நபிகளார் அவளிடம் அந்தப் போர்வையை அன்போடு கொடுத்தார்கள். "வாங்கிக் கொள் மகளே!" - என்றார்கள் வாஞ்சையோடு!

போர்வையைப் பெற்றுக் கொண்ட உம்மு காத் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள்.

"அன்பு நபி எனக்கு இதை அன்பளிப்பாக தந்தாரே.. அதனால்தான் இந்தப் போர்வை சிறப்புக்குரியதாக மாறியது!" - என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

நமக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் .. உம்மு காத் அதிஷ்டக்காரப் பெண் என்பது உண்மைதானே?

----- இறைவன் நாடினால்.. 'அருட்கொடைகள்' தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 6463872550344772963

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress