அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 22: 'அவர்கள் எதிரிகளா?'

"யாராக இருந்தால் என்ன? பாவம் அவர்கள்..! அவர்கள் என்ன எதிரிகளா கொல்வதற்கு! போர் வீரர்களா மோதுவதற்கு! போர் முனையில் கவனமாக இருக்க வேண்டாம்? ஐயகோ..! போரில் பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுவிட்டோமே?" - அழுதழுது துடித்தார் அவர்!

தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள அணு குண்டுகளை வீசி முதியோர்கள், பெண்கள், இயலாதோர், குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழல் என்று அனைத்தையும் அழித்த உலகத் தலைவர்கள் மத்தியில் அறியாமல் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தலைவர் கண்ணீர் சிந்தி அழுகிறார். துடிதுடித்துப் போகிறார்.

யார் அவர்? இதோ இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..

 
குழந்தைகள் இறைவனின் அற்புதப் படைப்பு!

எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான் என்பதை நபி பெருமானார் தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டினார்கள். அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் நேசித்தார்கள். குழந்தைகள் நலனுக்காகப் பாடுபட்டார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால்.. அன்பு நபிகளாரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது!

அன்றும் அப்படிதான்!

போர்க்களத்திலிருந்து வந்த அந்தச் செய்தி நபிகளாரை மிகவும் பாதித்தது. மனதைக் கலங்கடித்தது.


"போர்க்களத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்ட சில சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்!"- என்பதே அந்தச் செய்தி.

நபிகளார் அப்படி விரக்தி அடைந்து நபித்தோழர்கள் அதுவரையும் பார்த்ததே இல்லை.

"இறைவனின் தூதரே, தங்களின் வருத்தத்துக்கு என்ன காரணம் என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா?" - என்று மெதுவாகக் கேட்கவும் செய்தார்கள்.

அத்தோடு நபிகளாரைச் சமாதானப்படுத்துவது போல, "போரில் கொல்லப்பட்டது நமது குழந்தைகள் அல்ல; எதிரிகளின் குழந்தைகள்!" - என்றார்கள் மெதுவாக.

ஆனால், நபித்தோழர்களின் வார்த்தைகள் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

"யாராக இருந்தால் என்ன? பாவம் அவர்கள்! அவர்கள் என்ன எதிரிகளா கொல்வதற்கு? போர்வீரர்களா மோதுவதற்கு? போர்முனையில் கவனமாக இருக்க வேண்டாமா? ஐயகோ! போரில் பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டு விட்டோமே!" - என்று அழுதழுது துடித்தார்கள் நபிகளார்.

"... நினைவில் வையுங்கள்! தோழர்களே, நன்றாக நினைவில் வையுங்கள்!" - நபிகளாரின் குரலில் கடுமை குடிக்கொண்டது.

"....தோழர்களே, இதை நன்றாக நினைவில் வையுங்கள்! குழந்தைகள் அப்பாவிகள். எந்தப் பாவமும் செய்யாதவர்கள். போரிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவர்கள். அதனால், இனி குழந்தைகள் விஷயத்தில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். என்ன புரிகிறதா?" - என்று அறிவுறுத்தினார்கள் நபிகளார் தமது தோழர்களிடம்.

- - - - இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்..


Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 6311533798581227038

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress