அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 23: 'தந்தையின் உடமைகள்!'

வளைந்த முதுகு! தளர்ந்த நடை! நடுங்கும் உடல்..! பழுத்த நரை..! இடுங்கிய கண்கள்...!

தடி ஊன்றியபடி ஒரு முதியவர் நடக்க முடியாமல் நடந்து அங்கு வந்தார்.

இன்று ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் வழக்கில் ஆஜராவதற்காக!

அந்த வழக்கைத் தொடுத்தவர் முதியவரின் மகன்!

நபிகள் நாயகம் இந்த வழக்கை எப்படி கையாளப் போகிறார்கள்..?

வாருங்கள் இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..!' பார்ப்போம்!

ஒருமுறை முஹம்மது நபிகளாரிடம் (ஸல்) ஓர் இளைஞர் வந்தார்.

"ஓ..! இறைவனின் திருத்தூதரே, என் தந்தை எனது பொருளை நினைத்த போதெல்லாம் எடுத்துச் செலவழிக்கிறார்!" - என்று புகார் செய்தார்.

நபி பெருமானார் அவருடைய தந்தையை அழைத்து வரும்படி சொன்னார்கள்.

சற்று நேரத்தில்.. கையில் ஒரு தடி ஊன்றியபடி நடக்க முடியாமல் நடந்து ஒரு முதியவர் அங்கு வந்தார்.

வளைந்த முதுகு. தளர்ந்த நடை. நடுங்கும் உடல். பழுத்த நரை. இடுங்கிய கண்கள்.




முதியவரைஅருகில் இருத்திக் கொண்டு நபிகளார் விசாரித்தார்கள்.

அதற்கு அவர் சொன்னார்:

"இறைவனின் திருத்தூதர் அவர்களே! இதோ.. இங்கே.. நிற்கும் என் மகன் சிறுவனாக இருந்தான். மிகவும் பலவீனமாக.. இயலாதவனாக இருந்தான். நானோ மிகவும் பலம் மிக்கவனாக.. எதையும் செய்யும் திறனுள்ளவனாக இருந்தேன். இதோ இவன்.. என்னை எல்லாவற்றுக்கும் சார்ந்து வாழும் நிலையில் வெறுங்கையுடன் இருந்தான். நானோ அவன் கேட்பதை எல்லாம் செய்துத் தரும் செல்வச் சீமானாக இருந்தேன்.

அப்போதெல்லாம்.. என் பொருட்களை எடுப்பதிலிருந்து ஒரு நாளும் நான் இவனை தடுத்ததேயில்லை.

இன்றோ.. " - என்று நிறுத்தியவர் ..

சற்று பெருமூச்சு விட்டுக் கொண்டே தொடர்ந்தார்:

".... இன்றோ நான் மிகவும் பலவீனமானாக ஆகிவிட்டேன். இவனோ இளமையுடன் பலசாலியாக இருக்கின்றான். நான் வெறுங்கையுடன் இருக்கின்றேன். இவன் செல்வந்தனாக இருக்கின்றான். இப்போது இவன் என்னைத் தன் உடமைகளைவிட்டும்.. செல்வத்தை விட்டும் என்னைத் தடுக்கின்றான்!"

இதைச் சொல்லும்போதே, முதியவரின் கண்கள் பனித்துவிட்டன. குரல் அடைத்துக் கொண்டது.

இதைக் கேட்டு நபிகளார் கண் கலங்கி விட்டார்கள்.


அந்த இளைஞனிடம் சொன்னார்கள்:

"நீயும்.. உனது உடமைகளும் உனது தந்தையாருக்கே சொந்தம்!"

ஒற்றை வரி! கோடானு கோடி பொருள் கொண்ட ஒற்றை வரி. பெற்றோருக்கு பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் சம்பந்தமாக உலகம் உள்ளவரை மனித இனத்துக்கு போதுமான அறிவுரை.

-  இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 2405825706231301668

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress