அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 32: 'இறைவணக்கம் எதற்காக?'
https://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_6.html
குனிதல் சிரம்பணிதல் மட்டுமே தொழுகையின் இலக்காகிவிடுமா? வெறும் அங்க அசைவுகள் மட்டும் இறைவணக்கத்தைப் பூர்த்தியாக்கிவிடுமா?
நரகவாசி என்றும், சுவனவாசி என்றும் மிக எளிதாக இருவர் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
இந்த அடையாளங்களுக்கான காரணங்கள் மட்டும் மிக
முக்கியமானவை. அவை சக மனிதர்களுடனான உறவுகளின் அடிப்படையில்
தீர்மானிக்கப்படுபவை!
எப்படி?
இதற்கான பதில்தான் இன்றைய 'அகிலத்தார்க்கு
ஓர் அருட்கொடையில்!'
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இறைவணக்கங்களின் நோக்கம் மனிதனின்
ஒழுக்க நெறிகளை வளர்ப்பதுதான். இந்த உயர்நிலையை அடைய முடியாவிட்டால்...
இறைவணக்கங்களால் எந்தப் பயனும் விளையவில்லை என்றே பொருள்.
இந்த சந்தேகம் ஒரு மனிதருக்கு ஏற்பட்டது. இதை அவர் நபிகளாரிடமும் கேட்டார்:
"இறைவனின் தூதரே! அந்தப் பெண் சிறந்த வணக்கசாலி. ஒருவேளை தொழுகையையும் அவள் விடமாட்டாள். தொழுகை மட்டுமா? நோன்பும் அப்படிதான். ஒரு நோன்பையும் அவள் விடுவதில்லை. அவளுக்கு இரக்கமும் அதிகம். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் தான - தர்மங்கள் செய்யும் நல்லுள்ளம் கொண்டவள். ஆனால, ... ஆனால்... அவள் தன்னுடைய அண்டை வீட்டாரோடு மட்டும் நல்லவிதமாக நடந்துகொள்வதில்லை. கடினமாக நடந்து கொள்கிறாள். இறைவனின் தூதரே! இவளின் நிலை என்ன?"
"அவள் நரகவாசி!" - நபிகளார் ஒருவரியில் பதிலளிக்கிறார்கள்.
அதே மனிதர் தொடர்ந்து கேட்டார்:
"இறைவனின் தூதரே! இன்னொரு பெண்.. அவள் அப்படியொன்றும் பெரிய வணக்கசாலி இல்லை. தொழுகை, நோன்பு இவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால, தான - தர்மங்களை அள்ளி அள்ளித் தருபவள். அதேபோல, தன் அண்டை வீட்டாரோடு மிகவும் இணக்கமாக நடந்து கொள்பவள். அவர்களுக்கு எந்தத் தொந்திரவையும் இவள் விளைவிப்பதில்லை. இறைவனின் தூதரே, இவளின் நிலை என்ன?"
"அவள் சுவனவாசி!" - நபிகளார் இதற்கும் ஒருவரியில் பதிலளிக்கிறார்கள்.

வணக்கங்கள் உன்னதப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மனிதருள்
மாணிக்கங்களாக அவர்கள் உருப் பெற வேண்டும். மனித உறவுகள் மலர வேண்டும்.
இதற்கான பலா-பலன்களை சமூகம் அனுபவிக்க வேண்டும்.
நோக்கம் அறியாத இறை வணக்கங்கள் ஜீவனற்ற சடம் போலத்தான்! இதனால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை!
- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்..