'நற்கூலியைப் பெறும் அருட்பேறு என்பது..'


இறைவன் உங்களுக்குத் திருக்குர்ஆனை அனுப்பினான். அதனை ஓதி அறிந்து உங்கள் அதிபதியை உணர்ந்து கொள்வதற்காக் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக! அப்படியிருக்கும்போது, திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் எப்போதேனும் முயற்சி செய்ததுண்டா?

இறைவன் தன்னுடைய திருத்தூதரை உங்களிடம் அனுப்பினான். முஸ்லிமாகத் திகழ்வது எப்படி என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக! அந்தத் திருத்தூதரவர்கள் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் என்றேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா?

இம்மையிலும், மறுமையிலும் கண்ணியத்தை அடைவதற்கான பாதையை இறைவன் உங்களுக்குக் காண்பித்தான். நீங்கள் அந்தப் பாதையிலா நடக்கிறீர்கள்? இம்மையிலும், மறுமையிலும் மனிதனைத் தாழ்த்தக்கூடிய செயல்கள் யாவை என்பதை இறைவன் உங்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காண்பித்தான். அத்தகைய செயல்களை உண்மையிலேயே நீங்கள் தவிர்த்துக் கொள்கிறீர்களா? 

இவற்றுக்கெல்லாம் உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?

திருக்குர்ஆனிலிருந்தும், பெருமானார் காட்டிய வழிமுறைகளிலிருந்தும் நீங்கள் அறிவு பெறவில்லை; அவற்றின்படி நீங்கள் நடக்கவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டால்.. நீஙகள் முஸ்லிம்களாக வாழவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். 

அப்படியானால் இறைவன் அளிக்கும் நற்கூலிகளை பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?இறைக்கட்டளைக்கு ஏற்ப வாழ்வதற்குரிய கூலி உங்களுக்கு எப்படி கிடைக்க முடியும்? 

நீங்கள் எந்தளவுக்கு முஸ்லிம்களாய் வாழ்கின்றீர்களோ அந்த அளவுக்குதான் உங்களது நற்கூலி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே அளவு நற்கூலியை மறுமையிலும் நீங்கள் அடையப் போகிறீர்கள்.

மௌலானா மௌதூதி (ரஹ்)

Related

ஒரு சொல் 1252930464419164709

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress