ஒரு சொல: 'இஸ்லாத்தைத் தழுவுதல் என்றால் என்ன?'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_22.html
"இஸ்லாத்தைத் தழுவுவதன் மூலம்தான் ஒரு மனிதன் முஸ்லிமாகின்றான்!" - என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
சரி.. இஸ்லாத்தைத் தழுவுதல் என்றால் என்ன?
"நான் முஸ்லிமாய் இருக்கிறேன்!" - என்றோ, நான் முஸ்லிமாகிவிட்டேன்! - என்றோ ஒரு மனிதன் வாயளவில் மட்டும் சொல்லிவிட்டால்.. அவன் இறைவனிடத்தில் முஸ்லிமாய் அங்கீகரிக்கப்படுவானா? அல்லது பிராமணப் பூசாரி ஒருவன் பொருள் தெரியாமல் சமஸ்கிருத மந்திரங்களைக் கூறுவதைப் போல, ஒருவன் பொருள் தெரியாமல் அரபிச் சொற்களை சொல்வதன் மூலம் முஸ்லிமாகிவிடுகின்றானா?
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
"நபி பெருமானார் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த அறிவுரைகளை ஒருவன் ஒப்புக் கொண்டு செயலாற்ற முனைவதற்கே இஸ்லாத்தைத் தழுவுதல் என்று பொருள்.
எந்த மனிதன் அப்படிச் செய்கின்றானோ அவன்தான் முஸ்லிம். எந்த மனிதன் அப்படிச் செய்யவில்லையோ அவன் முஸ்லிம் அல்ல!"
- என்றுதானே நீங்கள் விடை அளிப்பீர்கள்!
- மௌலானா மௌதூதி (ரஹ்)
![]() |
| மௌலானா மௌதூதி (ரஹ்) |

