'முஸ்லிம் என்று தீர்மானிப்பது எது?'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_24.html
ஒருவர் அறிவே இல்லாமல்
'பிரமணராக' இருக்க முடியும். ஏனென்றால்.. அவர் பிராமணராகவே பிறந்தார். எனவே பிராமணராகவே
இருப்பார். ஒருவர் அறிவே இல்லாமல் 'ஜாட்' வகுப்பினராக இருக்கலாம். ஏனென்றால்.. அவர் பிறந்தது
ஜாட் வகுப்பில்.
ஆனால், ஒரு மனிதன்
அறிவில்லாமல் முஸ்லிமாக முடியாது. ஏனென்றால்.. முஸ்லிம் பிறப்பினால் முஸ்லிமாவதில்லை.
அது அறிவினால் கிடைக்கக் கூடிய நற்பேறு!
நபிகளார் அவர்கள்
கொண்டுவந்த போதனை என்ன என்பதை அறிந்து கொள்ளாத ஒருவரால் அதன் மீது எப்படி நம்பிக்கை
கொள்ள முடியும்? எவ்வாறு அதன்படி நடக்க முடியும்? அறிவின்மை எனப்படும் இந்த அறியாமையோடு
ஒருவர் முஸ்லிமாய் ஆக முடியாது; முஸ்லிமாய் இருக்கவும் முடியாது!
முஸ்லிமுடைய வீட்டில்
பிறந்து, முஸ்லிம்களின் பெயர்களைச் சூட்டிக் கொண்டு, முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு,
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறவர் யாரும் உண்மையில் எப்படி முஸ்லிமாக இருக்க
முடியும்?
இஸ்லாத்தை புரிந்து
அதனை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டவரே முஸ்லிம்.
அவர் ‘லியோபால்ட், ரஞ்சித் சிங், ராம்
பிரசாத் அதனால் இவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்.
இவர் அப்துல்லாஹ் அதனால், ‘முஸ்லிம்’ என்று வெறும்
பெயர்களால் முஸ்லிம் சொல்லாடலை பயன்படுத்த முடியாது.
ஒரு முஸ்லிமுக்கும்,
முஸ்லிம் அல்லாதவருக்கும் இடையே உள்ள அடிப்படை வேற்றுமை வெறும் பெயர் ரீதியானது அல்ல!
அதேபோல, இருசாரருக்கும் இடையே உள்ள அந்த வேற்றுமை வெறும் உடை ரீதியானதுமல்ல. ஒரு முஸ்லிமுக்கும், முஸ்லிம் அல்லாதவருக்கும் இடையில் உள்ள முக்கிய அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

