ஒரு சொல்:'பெயர்களுக்குக் கிடைக்குமா இறைவனின் பேரன்பு?'
https://udayathaaragai.blogspot.com/2013/10/blog-post_3.html
இப்ராஹீம் நபி சிலை வணங்கியின் வீட்டில் பிறந்தார்கள். ஆனால், இறைவனை அறிந்து கொண்டார்கள். அந்த பரம்பொருளின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். எனவே, இறைவன் அவர்களை உலகம் முழுமைக்கும் தலைவராக்கினான்.
நூஹ் நபியின் மகன் திருத்தூதரின் வீட்டில் பிறந்தான். ஆனாலும், அவன் அந்த மகாசக்தியை அறிந்து கொள்ளவில்லை. இறைக் கட்டளைக்கு அடி பணியவுமில்லை. எனவே, அவன் பிறந்த குடும்பத்தைப் பொருட்படுத்தாமல் உலகம் உள்ளளவும் படிப்பினையாக இறைவன் அவனை தண்டித்தான்.
நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்: ' இறைவனிடத்தில் ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் இடையில் உள்ள வேற்றுமை எல்லாம் அறிவையும், செயலையும் அடிப்படையாகக் கொண்டது.
இறைவனை அறிந்து, அவன் காட்டிய நேரிய வழியை உணர்ந்து, அவனுடைய கட்டளைகளுக்குப் பணிந்து செயலாற்றுகிறவர்களுக்குத்தான் இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பேரன்பு கிடைக்க முடியும்.
இந்தப் பண்பு இல்லாதவர்கள், 'அப்துல்லாஹ்' , 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் வைத்துக் கொண்டாலும் சரி.. அல்லது 'தீனதயாள்', 'கேண்டாசிங்' என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் சரியே இறைவனிடத்தில் இந்த இருசாரருக்கும் இடையில் எவ்வித வேற்றுமையும் கிடையாது. இவர்கள் யாருக்கும் இறைனின் பேரன்பைப் பெறும் தகுதியும் கிடைக்க முடியாது!
- மௌலான மௌதூதி (ரஹ்)

