ஒரு சொல்: 'பரம்பொருளே! நின்னை சரணடைகிறேன்!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_21.html
கலிமாவின் பொருள் இதுதான்: "ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. முஹம்மது நபிகளார் இறைவனின் திருத் தூதர்!"
இந்தக் கலிமாவில் இடம் பெற்றிருக்கும் 'இலாஹ்' என்னும் சொல்லுக்கு இறைவன் என்பது நேரிடையான பொருளானாலும் இறைவன் எனப்படுபவன் உரிமையுடையவன், ஆணையாளன், படைப்பாளன், பரிபாலிப்பவன், இறைஞ்சுதல்களைக் கேட்டு அதை அங்கீகரிப்பவன் என்ற பண்புகளைச் சுட்டுவதால்.. வணங்கத் தகுதியுடையவன் அந்த இறைவனேயாவான்.
ஆக, கலிமாவின் முற்பகுதியான "லா இலாஹ இல்லல்லாஹ்!" இந்தப் பொருளையெல்லாம் விவரித்து அதை நினைவு கூரச் செய்கிறது.
இதை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தினால்,
- இறைவன் இல்லாமல் தானே உலகம் தோன்றவில்லை.
- பல கடவுளர் இல்லை.
- உலகைப் படைத்தவன் இறைவன்.
- இறைவன் தனித்தவன்.
- இறைவனுக்குரிய பண்புகள் வேறு யாருக்கும் இல்லை.
என்பதை எல்லாம் நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்.
இதை இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்தினால்,
- நாமும், நம்மிடம் மற்றும் உலகில் உள்ள அனைத்தும் இறைவனுக்கே உரியவை.
- படைப்பாளன், நற்பேறுகள் அனைத்தையும் அளிப்பவன்.
- வாழ்வும், மரணமும் அவனிடமிருந்தே வருகின்றன.
- கொடுப்பவனும், பறிப்பவனும் இறைவன்தான்.
- இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.
- இறைவனிடம் மட்டுமே இறைஞ்ச வேண்டும்.
- இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும்.
- இறைவனை மட்டுமே வழிப்பட வேண்டும்.
- இறைவனை மட்டுமே எஜமானனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்த அடிமையாக வாழ வேண்டும்.
- இறைவனின் ஆணைகளை மட்டுமே ஏற்று நடக்க வேண்டும்.
என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கிறீர்கள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

