இறைவா! அருள்வாய்:'சித்திரங்களாய் எங்கள் வாழ்க்கை அழகுறட்டும் பரம்பொருளே!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_28.html
ஒவ்வொரு காலைப் பொழுதும் என்னை சிலிர்ப்பூட்டுகிறது.
இறைவனின் அற்புத அழகியல், சிங்கார பரவசம் உலகெல்லாம் பரவும் அந்த நேரம் என்னை மெய்மறக்கச் செய்கிறது!
எத்தனை எத்தனை வர்ணஜாலங்கள் கற்பனையில் எழுகின்றனவோ அத்தனையையும் கொட்டி வடிவெடுக்கும் அந்த பிரமிப்பை நான் என்னவென்பேன்!
இறைவா! நின்னை தாள் பணிந்து நான் அடிமை என்னும் பூரணத்துவ நம்பிக்கையில் ஒடுங்கி நிற்கிறேன்!
பரம் பொருளே! ஒவ்வொரு கணத்தையும் உயிர்புள்ளதாகவும், சொஸ்தமானதாகவும், உன் கோடானு கோடி அடியார்களுக்கு நலம் பயப்பதாகவும் ஆக்கி வைப்பாயாக!
உலகெங்கும் நிறைந்திருக்கும் உன் படைப்பினங்களுக்கு நல்லின்பம் பயப்பதாகவும், அமைதியைத் தருவதாகவும் அருள்புரிவாயாக!
உன் வல்லமையைக் கொண்டும், விசாலத்தைக் கொண்டும், தயாளத்தைக் கொண்டும், இரக்கத்தைக் கொண்டும், சிறப்பியல்புகளைக் கொண்டும் எங்கள் ஒவ்வொரு பொழுதுகளையும் சிறப்பாக்கி வைப்பாயாக!
நல்லோராக இருந்து.. நல்லோராக பயன் பெறச் செய்து.. நல்லோராக மரணிக்கச் செய்து.. திரும்பவும் நல்லோராகவே எழுப்புவாயாக!