ஒரு சொல்: 'நேர்மையிழப்பதாகுமா?'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_29.html
'முஹம்மதுர் ரஸீலுல்லாஹி' என்று நீங்கள் கூறுவதன் பொருள், 'நபிகளார் அவர்கள் எந்தச் சட்டத்தை, எந்த வழிமுறையை காண்பித்தார்களோ, அவற்றையே நாங்கள் பின்பற்றி நடப்போம்; எந்தச் சட்டம் அதற்கு மாறுபட்டிருக்கிறதோ அதனை வெறுப்போம்!' - என்றும் வாக்குறுதி அளித்தவர்கள் ஆவீர்கள்.
இந்த வாக்குறுதி அளித்த பிறகு, நபிகளாரின் சட்டத்தை புறக்கணித்து உலகின் பிற சட்டங்களை ஏற்பதாய் இருந்தால் உங்களைவிடப் பொய்யர், அவநம்பிக்கையாளர் வேறு யாரும் இருக்க முடியாது.
ஏனென்றால், நபிகளாரின் சட்டம் நேர்மையானது என்றும், அதனையே நீங்கள் பின்பற்றப் போகிறீர்கள் என்றும் வாக்குறுதி அளித்துதான் நீங்கள் இஸ்லாத்தில் நுழைந்திருக்கிறீர்கள்.
இந்த வாக்குறுதியினால்தான் நீங்கள் முஸ்லிம் சமூகத்தில் ஒரு அங்கத்தினர்களானீர்கள். சக முஸ்லிம்களின் சகோதரர்களானீர்கள்.
- இதனால்தான் உங்கள் தந்தையாரின் உடமைகளில் உரிமை பெற்றீர்கள். இதனால்தான் முஸ்லிம் பெண்ணொருத்தியை மணந்து கொள்ள உரிமை கிடைத்தது.
- இதனால்தான் நீங்கள் பெற்ற குழந்தைகள் சட்டபூர்வமான குழந்தைகளாக அழைக்கப்படுகிறார்கள்.
- இதனால்தான் முஸ்லிம்கள் உங்களுக்கு உதவுகின்ற உரிமை உடையவராய் நீங்கள் ஆனீர்கள். உங்களுக்கு 'ஜகாத்' கொடுக்கிறார்கள். உங்கள் உயிர், பொருள், கண்ணியம், செல்வாக்கு அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இத்தனை சலுகைகளுக்குப் பிறகும் நீங்கள் உங்கள் வாக்குறுதியை முறித்துவிட்டால் இந்த உலகத்தில் உங்களைவிட நேர்மையற்றவர் எவரும் இருக்க முடியாது.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

