ஒரு சொல்: 'குறைந்தபட்ச தகுதி என்ன?


ஒருவர் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதற்கு குறைந்தபட்ச நிபந்தனைகள் என்ன? 'முஸ்லிம்' என்று அழைக்கப்படுவதற்கு ஒருவர் தகுதியுள்ளவர் என்றால், அவர் குறைந்தபட்சம் எப்படி இருக்க வேண்டும்?

இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னால் நீங்கள் 'குஃப்ர்' என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

இறைவனின் கட்டளைகளை மனிதன் நிறைவேற்ற மறுப்பது குஃப்ர். 

இஸ்லாம் என்றால், இறைவனுக்கும், இறைச்சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து இருப்பதோடு இறைவனால் அருளப்பட்ட சட்டங்களுக்கு முரணான எல்லா சட்டங்களையும் ஏற்க மறுப்பதுமாகும். 

இஸ்லாத்துக்கும், குஃப்ருக்கும் இடையே உள்ள இந்த வேற்றுமை திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

"எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்" (5:44) - என்கிறான் இறைவன்.

 தீர்ப்பு வழங்குவது என்றால், நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் மட்டும் திருக்குர்ஆனுக்குத் தக்கபடி தீர்ப்பு வழங்கிவிட்டால் போதும் என்பதல்ல; ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிக் கொள்ளும் தீர்ப்பே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் முன்னால் இந்த வினாக்கள் தோன்றுகின்றன:

  • இந்த பணியைச் செய்யலாமா? செய்யக்கூடாதா?
  • இந்த பணியை இப்படிச் செய்ய வேண்டுமா? அப்படிச் செய்ய வேண்டுமா?
  • இந்தப் பிரச்னையில் இந்த வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது  அந்த வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

இப்படிப்பட்ட எல்லா சந்தர்பங்களிலும் இறைவனுடைய வேதமான திருக்குர்ஆனும், நபிகளாரின் நடைமுறைகளும் ஒரு வழியைக் காட்டுகின்றன. மனிதனுடைய ஆசாபாசங்கள், மன இச்சைகள் அல்லது தந்தையார், பாட்டன் - முப்பாட்டன்மார்களின் ஆசாரங்கள் அல்லது மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் போன்றவை இன்னொரு வழியைக் காட்டுகின்றன. 

எனவே, இப்போது ஒருவன் இறைவனால் காட்டப்பட்ட வழியை விடுத்து வேறு ஏதேனும் ஒரு வழிக்குத் தகுந்தபடிச் செயலாற்ற தீர்மானித்தால், உண்மையில், அவன் குஃப்ர் எனப்படும் முரண்வழியைத் தேர்ந்தெடுக்கின்றான். தனது வாழ்நாள் முழுவதற்கும் இந்த முறையையே தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவன் ஒரு முழு காஃபிர் ஆகிறான். 

- மௌலானா மௌதூதி (ரஹ்)
 


Related

ஒரு சொல் 9102942044277618215

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress