ஒரு சொல்: 'இறைநம்பிக்கையின் உரைகல்'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_12.html
இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அடிமைப்படாமலும், நபிகளாரைத் தவிர வேறு எவரையும் பின்பற்றாமலும் இருக்கிற மனிதனே 'முஸ்லிம்' என்று அழைக்கப்படுகிறான்.
இறைவனுடைய, நபிகளாருடைய அறிவுரைகள் முற்றிலும் உண்மையானவை; அவற்றுக்கு முரண்பட்டவை அனைத்தும் தவறானவை. மனிதனுக்கு ஆன்மிக வாழ்விலும், உலகியல் வாழ்விலும் இருக்கிற நன்மைகள் அத்தனையும் இறைவனுடைய, நபிகளாருடைய அறிவுரைகளில்தான் இருக்கின்றன!" - என்று வாய்மையுடன் உறுதியாக நம்புகிறவனே முஸ்லிம்.
இதில் ஒரு மனிதனுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், அவன் தன் வாழ்வின் செயல்முறைகள் அனைத்திலும், "இறைவனுடைய, நபிகளாருடைய கட்டனைகள் எவை? என்றே பார்ப்பான். அவனுக்கு அக்கட்டளை தெரிந்துவிட்டால், நேரிய முறையில் அதற்கு தலைசாய்த்து விடுவான். அதன் பின் அவனது மனம் எவ்வளவுதான் போராட்டம் செய்தாலும், அவன் குடும்பத்தார் எத்தனைதான் வற்புறுத்தினாலும், உலக மக்கள் என்னதான் எதிர்த்தாலும் இவற்றில் எதையும் அவன் பொருட்படுத்த மாட்டான்.
ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் அவன் கொடுக்கின்ற தெளிவான பதில் இதுதான்: "நான் இறைவனுக்கு மட்டுமே அடிமை ; உங்களுக்கு அடிமை அல்ல. நான் நபிகளாரின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்கள் மீதல்ல!"
- மௌலானா மௌதூதி (ரஹ்)

