ஒரு சொல்: 'அசாத்தியம்... சாத்தியமானது எப்படி?"
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post.html
நல்ல கலிமாவிலிருந்து உங்களுக்குத் தெளிவாகக் கூடிய முதற் செய்தி, 'நீங்கள் இறைவனுக்கு அடிமைகள்!' - என்பதுதான்!
இந்தச் செய்தி உங்களுக்குத் தெளிவாகிவிட்டதும், "யாருக்கு அடிமையாக இருக்கிறீர்களோ அவனுடைய விருப்பத்திற்குத் தகுந்தபடியே நீங்கள் உலகில் செயல்படுவது இன்றியமையாதது!" - என்னும் செய்தியின் விளக்கமும் தானாகவே உங்களுக்குத் தெளிவாகிவிடும். இதற்கு மாற்றமாக நீங்கள் நடந்து கொள்வது உங்கள் எஜமானனுக்குச் செய்யும் துரோகமாகும்.
இதற்குப் பிறகு கலிமாவிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் இரண்டாம் செய்தி, ' நபிகளார் இறைவனின் திருத்தூதர்!' - என்பதாகும்.
இதைத் தொடர்ந்து, 'இறைவனின் திருத்தூதர் உலகமென்னும், விளைநிலத்தில் முட்களுக்கும், நச்சுச் செடிகளுக்கும் பதிலாக அழகிய மலர்களும், சுவை மிகுந்த கனிகளும் விளையும் தோட்டம் உருவாக்குவது எப்படி என்று சிறப்பாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்!' - என்னும் செய்தியின் விளக்கமும் உங்களுக்குத் தெளிவாகிவிடும்.
நீங்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றும்போது, மறுமையில் நல்ல பலன் தரத் தக்க அறுவடை கிடைக்கும். மாற்றமாக செயல்படும்போது, இழப்பே ஏற்படும்.
கலிமாவின் அறிவைப் பெற்றபின் செயல்களை சீரமைத்துக் கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.
இறப்பென்பது ஒரு நாள் நிச்சயம் உண்டு. அதன் பின், மற்றொரு வாழ்க்கை எதிர்படவிருக்கிறது. இம்மை வாழ்க்கையில் எதை தயார் செய்தீர்களோ அதன் பலனை வைத்துதான் நீங்கள் அந்த மறுமை வாழ்க்கையில் காலம் கடத்த வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை இருந்தால்... இறைத்தூதர் நபிகளாரின் வழியைவிட்டு மற்றொரு வழியை தேர்ந்தெடுப்பது அசாத்தியமாகும்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

