ஒரு சொல்:'பொருளற்றது'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_30.html
மறுமை அறுவடையில் நற்கனிகளைப் பெறும் வகையில், இம்மையில் வேளாண் செய்வது எப்படி என்பதை கலிமா மனிதனுக்குக் கற்றுத் தருகிறது.
மனிதன் அந்தக் கலிமாவை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அதாவது வேளாண் செய்ய தெரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி அவன் அறுவடை செய்வான்?
சரி.. ஒருவன் அந்தக் கலிமாவை வாயளவில் சொல்லிக் கொள்கின்றான். ஆனால், கலிமா சொல்லாதவரின் அறிவே அவனுக்கு இருக்கிறது. கலிமாவை நிராகரிப்பவனைப் போலவே அவனது செயல்களும் இருக்கின்றன என்றால், நிராகரிப்பாளனின் முடிவிலிருந்து அவன் எப்படி வேறுபட முடியும்?
வாயளவில் கலிமா சொன்னவன், வேளாண்மை செய்யும் வழிமுறையைக் கல்லாதவன் ஆவான். வாழ்நாள் முழுவதும் முட்களையே விதைத்துக் கொண்டிருந்தவனாவான். இப்படிப்பட்டவனுக்கு மறுமையில் கனிகள் நிறைந்த சோலைகள் கிடைக்க இறைவனுக்கு அவன் வழிப்படவே இல்லை.
ஒரு பணியைச் செய்வதும், அதை செய்யாமலிருப்பதும் ஒரே விதமானது என்பது பொருளற்றது.
ஒரு மருந்தை பயன்படுத்தியபின் மருந்து பயன்படுத்தாதபோது இருந்த நிலையேதான் உள்ளது என்றால் அது மருந்தின் குறைபாடு எனலாம்.
இதுபோலவே, கலிமா சொன்னவனின் அறிவும், செயலும் கலிமா சொல்லாதவனின் அறிவையும் செயலையும் ஒத்திருக்கிறது என்றால் சொல்லிய அந்தக் கலிமாவால் என்ன பயன்?
ஒரு முஸ்லிமுக்கும், மற்றவனுக்கும் இடையில் உலகியல் வாழ்விலேயே எந்த வேறுபாடும் இல்லை என்றால் மறுமையில் அவர்களிடையே எப்படி வேறுபாடு இருக்க முடியும்?
- மௌலான மௌதூதி (ரஹ்)

