ஒரு சொல்: 'சாத்தியமேயில்லை!'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_29.html
முஸ்லிம், நிராகரிப்பாளன் ஆகிய இருவரின் முடிவிலும் காரணமில்லாமல் வேற்றுமை ஏற்பட்டு விடுவதில்லை.
உண்மையில், மறுமையில் வரப்போகிற வேற்றுமை, ஆரம்பத்தில் இருந்த வேற்றுமையின் விளைவுதான்.
உலக வாழ்வில் முஸ்லிமுக்கும் மற்றவருக்கும் இடையில் அறிவிலும், செயலிலும் வேற்றுமையே இல்லை என்றால், மறுமையில் இவ்விருவரின் முடிவுகளிலும் வேற்றுமையே இருக்காது.
உலக வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் அறிவிலும் செயலிலும் நிராகரிப்பாளனைப் போலவே இருந்தால், மறுமையில் நிராகரிப்பாளனுக்கு ஏற்படுவது போன்ற இழப்பிலிருந்து அந்த முஸ்லிம் தப்பிவிடுவது எந்த வகையிலும் சாத்தியமில்லை!
- மௌலானா மௌதூதி (ரஹ்)

