பொன்னேடுகள்: 'எனது வாழ்வில் மறவா நினைவுகள்'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_9182.html
பிப்.1964. மாலை.
நான் எனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, எதிரே வந்துக் கொண்டிருந்த ஒரு கார் படுவேகத்துடன் என் கார் மீது மோதியது. நான் மயக்கமடைந்துவிட்டேன்.
எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தேனே தெரியவில்லை. யாரோ எனது பெயரைச் சொல்லி பேசிக் கொள்வது போல உணர்ந்தேன்.
மெல்ல.. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தபோது, எனது கணவர், உறவினர்கள், இயக்க ஊழியர்கள் என்று பெரும் கும்பலுடன் காவல்துறையின் மருத்துவமனையில் இருப்பதை அறிந்தேன். எல்லோர் முகத்திலும் கவலை சூழ்ந்திருந்தது.
கண்களைத் திறந்ததும், முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு நடந்த விபத்துக் குறித்து விசாரித்தேன். ஆனால், வெகுவிரைவிலேயே நான் மயக்கமுற்றுவிட்டேன்.
எனக்கு மீண்டும் நினைவு திரும்பியதும். எக்ஸ்ரே அறைக்கு என்னை மருத்துவர்களும், செவிலியர்களும் அழைத்துச் செல்வதைக் கண்டேன்.
நடந்த சம்பவங்கள் அப்போதுதான் தெளிவாக எனக்கு நினைவுக்கு வந்தன.
"எல்லாப் புகழும் இறைவனுக்கே ஜைனப்! இறைவன் உன் உயிரைக் காத்துவிட்டான்; அது போதும்!" - என்று என் கணவர் சொல்வது எனக்கு மெதுவாகக் கேட்டது.
நான் என் கார் டிரைவரைப் பற்றிக் கேட்க, அவரும் பெரிய காயங்கள் இல்லாமல் பிழைத்துக் கொண்டார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற நிம்மதி தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டேன்.
எக்ஸ்ரே சோதனையின் மூலமாக எனது தொடை எலும்பு முறிந்திருப்பது தெரிந்தது.
பிறகு நான் 'மதார் ஆஸீர்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எலும்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மது அப்துல்லாஹ் எனக்கு மூன்றரை மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, நடந்த விபத்து நாஸரின் உளவுத்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டேன். அவர்களின் நோக்கம் என்னைக் கொல்வதாகும். இந்த விபத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தின.
- ஜைனப் அல் கஸ்ஸாலி

