ஒரு சொல்: ‘சட்டம் சாதியை ஒழிக்குமா?’



சட்டத்தின் மூலமாக ‘கிரிமினல் குற்றங்கள், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமை போன்ற சில தீமைகளை ஒழிக்க முடியும். ஆனால், சமூகத் தீமைகளை சட்டங்களின் மூலமாக முழுமையாக ஒழிக்க முடியாது.

1961 – இல், இயற்றப்பட்டது வரதட்சணை எதிர்ப்புச் சட்டம். உண்மையில் இந்த சட்டம் இன்று பிடிக்காத கணவன், மாமனார், மாமியார் மீது ‘காழ்ப்புணர்ச்சி’களை தீர்த்துக் கொள்ளவே உதவுகிறது. இதன் எதிர்வினையாக பாதிக்கப்பட்டோர் ஆண்கள் பாதுகாப்பு சங்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1955 – இல், சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 1989-இல், வன்கொடுமை எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 2003 லிருந்து 2009 வரையிலான காலகட்டத்தில், இந்த சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 3766. இதில் தண்டனை வழங்கப்பட்டவை 412.


இந்தியாவில் வாழும் தலித்துகளில் ஒவ்வொரு வாரமும்,

  • 13 பேர் கொல்லப்படுகிறார்கள்.
  • 5 வீடுகள் எரிக்கப்படுகின்றன.
  • 6 பேர் கடத்தப்படுகிறார்கள்.
  • 21 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.

அதேபோல, 

  • 18 நிமிடத்திற்கு ஒரு குற்றச் செயல் நிகழ்த்தப்படுகிறது. 
  • கிராமப்புறங்களில் 37.8 விழுக்காடு அரசு கல்விச்சாலைகளில் தலித் மாணவர்கள் தனிமைப்படுத்தியே அமர வைக்கப்படுகிறார்கள்.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் தலித்துகள் 27.6 விழுக்காடு காவல் நிலையங்களில் நுழையவே அனுமதிக்கப்படுவதில்லை.
  • தலித்துகள் வசிக்கும் 33 விழுக்காடு கிராமங்களுக்கு அரசின் கிராம நல மற்றும் சுகாதாரப் பிரிவைச் சார்ந்த பணியார்கள் செல்ல விரும்புவதில்லை.
  • அதேபோல, 48.4 விழுக்காடு தலித் கிராமங்களுக்கு குடி நீர் வசதி மறுக்கப்பட்டுள்ளது.
  • 70 விழுக்காடு கிராமங்களில் தாழ்த்தப்பட்டவரோடு மேல் சாதியினர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதில்லை.
  • தலித் பெண்களில் 70 விழுக்காடு பேர் கல்வி கற்காதவர்கள். 
  • தென்னிந்தியாவில் வசிக்கும் தலித்துகளில் ஆயிரக் கணக்கான பெண்கள் தேவதாசிகளாக.. குல வழி விபச்சாரிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.(ஆதாரம்: http://www.overcomingviolence.org/) 


இத்தனை குற்றச் செயல்கள் நிகழ்ந்தும்,

2006-இல், பதிவு செய்யப்பட்ட தலித்துகளுக்கு எதிரான வழக்குகள் 5.3 விழுக்காடு மட்டுமே!

தகுந்த சட்டங்கள் தேவைதான். ஆனால், அவற்றை பயன்படுத்தும்போது, உயர்சாதிக்காரர்களால் எழும் எதிர்ப்புகளை சமாளிக்க எந்த அரசும் தயாராக இல்லை. அரசு எந்திரமும் தயாராக இல்லை. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விசாரிக்கப்பட்ட பல கமிஷன்களின் இந்த கருத்துதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆமை வேக நீதிமன்றங்களால்.. பல தலைமுறைகள் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்க வேண்டியிருக்கும். கொடும் போபால் விஷ வாயு கசிவால் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இருபது ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியான கொடுமை உலகில் எங்கும் நிகழ்ந்திருக்காது!

மக்களை பண்படுத்திய பிறகு இயற்றப்படும் சட்டங்கள் பலனளிக்கும். அண்ணா அவர்களின் சுயமரியாதைத் திருமண சட்டங்கள் வெல்வதற்கு காரணம், சட்டம் இயற்றப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் சுயமரியாதை உணர்வுகள் விதைக்கப்பட்டு, சாதிக்கு எதிரான உணர்வுகள் உருவாக்கப்பட்டு, மக்கள் மனது பண்பட்டுப்போனதுதான்!

மது தீமைகளின் தாயகம்! அதை ஒழிக்க வேண்டும் என்னும் போது, மதுவுக்கு எதிரான உணர்வுகள் மக்கள் மனதை பண்படுத்தும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பித்திருக்க வேண்டும். பிறகு மது தடை செய்யப்பட வேண்டும். இதைதான் வரலாற்றில் நபிகளார் செய்து காட்டினார்கள்.

ஆக சட்டத்தின் மூலம் சாதீய கொடுமைகளை ஓரளவு தடுத்து நிறுத்தலாம். ஆனால், வெறும் சட்டங்கள் சாதிக்கு எதிரான சிந்தனை மாற்றத்தை கொண்டு வராது.

Related

ஒரு சொல் 7853606107894778010

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress