ஒரு சொல்: ‘ஆட்சி – அதிகாரம் சாதியை ஒழிக்குமா?’



கல்வியை திட்டமிட்டு மறுத்ததைப் போலவே, அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தார்கள். ஏனென்றால் முடிவெடுக்கும் நிலைக்கு அவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்கான திட்டமிது. ஒடுக்கப்பட்ட மக்கள் பெறும் அதிகாரம் வினாக்களாக எழும் என்பதும் ஆதிக்க சக்திகளின் திட்டம்.

இதையும் மீறி ஜனநாயக நாட்டில் பல்வேறு பதவிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் வந்த பின்னும் அவர்களின் யதார்த்தமான நிலைமை என்ன?

இந்த கேள்விக்கான பதில்: மேலவளவு கிராமம்.

தாழ்த்தப்பட்டவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அவர்தான் இறந்தவர் குறித்து பறையறிவிப்பை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தல். கடைசியில் அவர் ஆதிக்க சக்திகளால் கொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஒடுக்கப்பட்டவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் அவரிடம் அரசு கோப்புகள் ஏதும் போவதில்லை. அந்த பஞ்சாயத்தின் சாதாரண கடைநிலை ஊழியர்கூட அவருக்கு மரியாதை தருவதில்லை. இந்தக் கேவலங்கள் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தொடந்தது; தொடர்கிறது.

ஒருவேளை அதிகாரம், கொடுமைக்குள்ளான மக்களை பாதுகாப்பதற்காக அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் உதவலாம்.

பாபாசாகேப் அம்பேத்கர் சொல்கிறார்:

“Political Power Can’t be a Panacea for the ills of depressed Classes. Their Salvation lies in Social Elevation”

“அதிகாரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் நோய்களுக்கான அருமருந்தல்ல. அவர்களின் பிரச்னைக்குரிய தீர்வு சமூக உயர்வில்தான் உள்ளது!”

Related

ஒரு சொல் 5215107029218318570

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress