ஒரு சொல்: 'ஏமாற்றுப்பேர்வழி'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_30.html
'லா இலாஹ இல்லல்லாஹீ; முஹம்மதுர் ரஸீலுல்லாஹி' என்னும் இந்த சொற்றொடரின் பொருளை நீங்கள் உணர்ந்தால்.. அதனை மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு வாக்குறுதி அளித்தால்.. எல்லா நிலைகளிலும் நீங்கள் இறைவனுடைய கட்டளைக்குத்தான் பணிந்து நடக்க வேண்டும். இதனை செயல்படுத்துவதற்கு எந்தப் போலீஸீம், நீதிமன்றமும் உலகில் இல்லாவிட்டாலும் சரியே!
இறைவனுடைய போலீஸோ, இராணுவமோ, நீதிமன்றமோ, சிறைச்சாலையோ எங்கும் கிடையாது. எனவே, இறைவனுடைய சட்டத்தை முறிப்பது உங்களுக்கு எளிதான செயல்.
ஆனால், அரசுகளுக்கென்று போலீஸ், நீதிமன்றம், சிறைச்சாலைகள் எல்லாம் இருக்கின்றன. ஆகவே, அரசாங்கத்தின் சட்டங்களை முறிப்பது, மீறுவது கடினமான செயல் என்று எண்ணுகின்ற மனிதனைப் பற்றி நான் துணிந்து கூறக்கூடியது இதுதான்:
"அவன், 'லா இலாஹ இல்லல்லாஹீ; முஹம்மதுர் ரஸீலுல்லாஹி' என்று வாக்குறுதி கொடுக்கும்போது, பொய்யுரைக்கின்றான்; தன் இறைவனையும், முழு உலகத்தையும், முஸ்லிம்கள் அனைவரையும் ஏமாற்றுவதோடு அவன் தன்னையும் சேர்த்து ஏமாற்றிக் கொள்கின்றான்!"
- மௌலானா மௌதூதி (ரஹ்)

