ஒரு சொல்:'தூற்றப்பட வேண்டுமா?'



உண்மையான உள்ளத்தோடு உறுதி மொழி கொடுத்துவிட்டப் பிறகு சில கடமைகள், பொறுப்புகள் உங்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன.

எல்லாவற்றுக்கும் சொந்தக்காரனான இறைவன் அவற்றை அடைக்கலப் பொருள்களாக உங்களிடம் ஒப்படைத்திருக்கின்றான். உரிமையாளன்  எப்படிக் கட்டளையிடுகின்றானோ அப்படித்தான் அவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவன் விரும்பாத விதத்தில் நீங்கள் பயன்படுத்தினால் அது அவனுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகும். 

உங்களது உடல் அவையங்களான கால்களையும், கைகளையும்கூட அவனுடைய விருப்பத்துக்கு மாறாக அசைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்களது கண்களால் அவனுடைய விருப்பத்துக்கு மாறாக நீங்கள் எதையும் பார்க்கக்கூடாது. அவனுக்குப் பிடிக்காத எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. 

உங்களிடம் இருக்கும் நிலங்களிலும் மற்ற பொருள்களிலும் உரிமையாளனின் நாட்டத்துக்கு மாறாக எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது.

"என்னவள்" என்று நீங்கள் சொல்கின்ற உங்களது மனைவியும், "என்னுடைய"  என்று நீங்கள் குறிக்கிற குழந்தைகளையும் இறைவன் உங்களிடம் தற்காலிகமாக ஒப்படைத்துள்ளான் என்னும் அடிப்படையில்தான் அவர் உங்களது உரிமையுள்ளவராக இருக்கிறார். அவர்கள் உங்கள் குழந்தைகளாக இருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் நீங்கள் மனம் போன போக்கில் நடந்து கொள்ள முடியாது. இறைவனுடைய கட்டளைகளுக்கு ஏற்றவாறே நடந்துகொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக நடந்து கொண்டால், அந்நியரின் உடைமைகளைப் பறித்துக் கொள்ளும் மோசக்காரைப் போல ஆகிவிடுவீர்கள். 

அந்நியனின் நிலத்தை அபகரித்துக் கொள்கிறவனை நீங்கள் துரோகி என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதுபோலவே, இறைவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களை உங்களுடையது என்று உரிமைக் கொண்டாடி உங்கள் விருப்பப்படி பயன்படுத்தினால் அல்லது இறைவனைத் தவிர வேறு யாரேனும் ஒருவருடைய விருப்பத்திற்குத் தக்கபடி பயன்படுத்தினால் அதே துரோகக் குற்றச்சாட்டு உங்களையும் சாரும்.

- மௌலானா மௌதூதி (ரஹ்)

Related

ஒரு சொல் 1022383046824275891

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress