ஒரு சொல்: 'சொல்லிக் கொள்ள ஏதுமில்லை!'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_5.html
இறைவன் கொடுத்த அடைக்கலப் பொருட்களை, இறைவனின் பாதையிலேயே செலவிடுகிறீர்கள். இந்த செயல் மூலமாக இறைவனுக்கோ அல்லது மற்றவருக்கோ ஏதோ பேருதவி செய்துவிட்டதாய் நீங்கள் கருதிக் கொள்ள முடியாது.
இறைவனின் பாதையிலே நீங்கள் தர்மம் செய்கிறீர்கள். நன்மை செய்கிறீர்கள். பெரும் தியாகம் என்று நினைக்குமளவுக்கு நீங்கள் உங்கள் உயிரையே அர்ப்பணித்து விடுகிறீர்கள். இப்போதும்கூட நீங்கள் யாருக்கும் எந்தவிதமான பேருதவி செய்யவில்லை.
அதிகபட்சமாக இப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்: 'பட்ட நன்றிக் கடனை செலுத்தினேன்!' அவ்வளவுதான்!
அப்படியிருக்கும்போது, தான் ஏதோ பெரிய சாதனை ஒன்றைச் செய்துவிட்டதாக நினைத்துப் பெருமைப்படுவதற்கும், பூரிப்படைவதற்கும், தன்னை மற்றவர்கள் 'பெரிய மனிதன்' என்று நினைக்க வேண்டும் என்று பாராட்டை எதிர்ப்பார்ப்பதற்கும் இங்கு ஒன்றுமேயில்லை!
- மௌலானா மௌதூதி (ரஹ்)

