ஒரு சொல்: இறைவனுக்குப் பணிதல், அழகிய முன்மாதிரிகள்


அரபு நாட்டில் மதுப்பழக்கம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை கேள்விட்டிருக்கலாம். ஆண், பெண், இளைஞர், முதியோர் என்று வயது பேதம் இல்லாமல் அரபியர் சதா மது போதையில் மூழ்கியிருப்பார்கள். உண்மையில், மதுவில் அவர்களுக்கு மோகம் இருந்தது. அதனை வர்ணித்து அவர்கள் பாடல் இயற்றுவார்கள். அதற்காக அவர்கள் உயிரையும் அர்ப்பணித்தார்கள். 

மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து விலகுவது எவ்வளவு சிரமம் என்பதை நாம் அறிந்திருப்போம். மனிதன் உயிரையும் விட்டுவிடுவான். ஆனால், மதுவை விடமாட்டான். குடிமகனுக்கு மது கிடைக்கவில்லை என்றால், அவன் மனநோயாளியைவிட மிக மோசமாகிவிடுவான். 

ஆனால், திருக்குர்ஆனில் மது விலக்கு சம்பந்தமாக சட்டங்கள் அருளப்பட்டபோது, என்ன நடந்தது தெரியுமா? அந்த விசித்திரத்தை என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

மதுவுக்காக உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த அதே அரபு மக்கள் இந்த மதுவிலக்கு கட்டளைகளை கேள்வியுற்றதும் தம் கைகளாலேயே மதுக் குடங்களை போட்டு உடைத்தார்கள். மதீனாவின் வீதிகளில் மழைத் தண்ணீர் போல மது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நேரத்தில் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள். மது தடை செய்யப்பட்டது சம்பந்தமாக நபிகளாரின் உத்திரவை அறிவிப்பாளர் தெருத் தெருவாக சென்று அறிவித்துக்  கொண்டிருந்தார். அந்த அறிவிப்பைக் கேட்டதும் மது அருந்திக் கொண்டிருந்தவர்களின் கரங்கள் அந்த நிலையிலேயே நின்றுவிட்டன. வாயில் மதுவைக் கொண்டு சென்றவர் உடனே அதை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு துளியைக் கூட தொண்டைக்குள் கொண்டு செல்லவில்லை. 

இதுதான் இறைநம்பிக்கையின் சிறப்பு.

இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றுவதற்கான முன்மாதிரி.

- மௌலானா மௌதூதி (ரஹ்).

Related

ஒரு சொல் 8199248911361374012

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress