அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 27: 'மென்மையில் நன்மை..! '

மிகவும் சிக்கலான விஷயமது!

ஒத்த வயதுடையவராக இருந்தால்... எளிதில் சொல்லிவிடலாம். அந்த குற்றங்குறையைத் சீர்த்திருத்தி விடலாம்.

ஆனால், சீர்த்திருத்தப்பட வேண்டியவரோ.. வயதில் தங்களைவிட பன்மடங்கு பெரியவர்.. ம்.. என்ன செய்வது..?

அவர்களின் பாட்டனாரின் அழகியல் சீர்திருத்தப் பள்ளியில் பயின்றவர்களாயிற்றே.. விவாதங்களில் ஈடுபடாமல் ... நேரத்தை வீணடிக்காமல் இலக்குகளை வெல்லும் தாரக மந்திரங்களை அந்தப் பாசறையில் கற்றவர்களாயிற்றே.. !

அந்த சின்னஞ் சிறார்கள் எடுத்த முடிவுதான் என்ன?

இதோ.. இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்!.. 
 
தொழுகைக்காக சிறுவர் இருவரும் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.

தொழுகைக்கு முன், முறையாகச் செய்யப்படும், கை, கால், முகம் கழுவுதல் போன்ற உடல் சுத்தமான - ஒளுவைச் செய்யத் தொடங்கினார்கள்.

நீர்த் தொட்டிக்கு எதிரே ஒரு பெரியவர்.

அவர் தப்பும் ... தவறுமாய் ஒளுச் செய்து கொண்டிருந்தார்.

ஒளுவைச் சரியாகச் செய்யாவிட்டால்.. தொழுகை நிறைவேறாதே! இதை பெரியவரிடம் எப்படி சொல்வது?

சிறுவர் இருவரும் ஒரு திட்டம் போட்டனர். சாதுர்யமான திட்டமது!

அதன் பின் பெரியவர் அருகில் சென்றனர். பணிவுடன் 'சலாம்' - முகமன் கூறினர்.

"..அய்யா, பெரியவரே, சிறுவர்களாகிய எங்களுக்கு ஒளுச் செய்ய சரியாக வராது. உங்களுக்கு எதிரே இதோ இப்படி அமர்ந்து நாங்கள் ஒளுச் செய்கிறோம். ஏதாவது தவறு ஏற்படின் தயவுசெய்து திருத்த வேண்டும்!" - என்று கேட்டுக் கொண்டனர்.


அதன்பிறகு, சிறுவர் இருவரும் பெரியவர் எதிரே சென்று அமர்ந்தனர். சரியான முறையில் மெதுவாக.. ஒவ்வொரு செயலையும் செய்தனர்.

இது பெரியவர் சரியான முறையில் ஒளுச் செய்ய பெரிதும் உதவியது.

அவர் ஒளுச் செய்வதில் தன்னிடமிருந்த தவறுகளைக் களைந்து கொண்டார். சரியான முறையில் உடல் சுத்தம் செய்து கொண்டு எழுந்தார்.

"இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்தாம் தோழர்களை மென்மையாகத் திருத்துவதைப் போன்ற இச்சிறார்களின் நாசுக்கான பண்பை என்னவென்பேன்!" - என்று வியந்தவாறே பள்ளிக்குள் தொழச் சென்று விட்டார்.

தங்கள் சாதுர்யம் வென்றதைக் கண்டு நபிகளாரின் அன்பு பேரர்களான இமாம் ஹஸனும், ஹீஸைனும் (இறையருள் பொழிவதாக!) புன்னகைத்துக் கொண்டார்கள்.

                      

- இறைவன் நாடினால்.. 'அருட்கொடைகள்' தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 2501098779695753383

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress