அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 26: 'வழிபாட்டு வழிகள்'

நபிகளாரின் வாழ்வியல் கூறுகளில் வணக்க முறைகள் எவ்வாறு இருந்தன?

இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல.. ஒரு முறை நபித்தோழர் மூவருக்கும் ஏற்பட்டது. தங்கள் கேள்விக்கு சரியான விடை கிடைக்கும் இடத்தையும் அவர்கள் தேர்வு செய்தனர். அவர்தான் ஆயிஷா (இறையருள் பொழிவதாக!) நாச்சியார். ஏராளமான நபிமொழிகளின் அறிவிப்பாளர்.

ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளைக் கேட்டறிய அவர்கள் நாடுவது ஆயிஷா நாச்ச
ியாரைத்தான்!

சரி.... நபிகளாரின் அன்புத் துணைவியார் சொன்னது என்ன? நபித்தோழர்கள் செய்தது என்ன?

இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்' பார்ப்போமா?
  
"முஹம்மது நபிகளாரின் (ஸல்) வணக்க முறைகள் எவ்வாறு இருந்தன?" - என்பதை அவர்களின் துணையியாரிடம் மூவர் கேட்டறிந்தனர்.

இறைத்தூதரின் இறைவழிபாடுகள் குறைவாக இருப்பதாக அவர்கள் கருதினர்.

"பெருமானார் பாவம் செய்யாதவர்களாயிற்றே! நாமோ பாவம் செய்யாதோர் அல்லவே!" - என அவர்கள் எண்ணிக் கொண்டனர். தங்களுக்குத் தாங்களே முடிவுகளையும் எடுத்துக் கொண்டனர்.

ஒருவர் சொன்னார்: " இனி நான் இரவுகளில் உறங்காமல் இரவு முழுவதும் உபரியான - நபிஃல் வணக்கங்களில் (கடமைக்கும் அதிகமான வணக்கங்கள்) கழிக்கப் போகின்றேன்!"

இரண்டாமவர், " இனி நான் இடைவிடாமல் உபரியான நோன்பு நோற்கப் போகின்றேன். பகலில் ஒரு போதும சாப்பிடவே போவதில்லை!" - என்றார்.

மூன்றாமவர் தன் பங்குக்கு, " நான் இல்லற இன்பங்களிலிருந்து இனி ஒதுங்கி இருக்கப் போகின்றேன்! நான் ஒரு நாளும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை!" - என்று சூளுரைத்தார்.

இந்த விவகாரம் நபிகளாருக்கு எட்டியது. நபித்தோழர்களை அழைத்து விசாரித்தார்கள்.

"தோழர்களே, நான் உங்களைவிட அதிகதிகமாக இறைவனுக்கு அஞ்சக்கூடியவனாகவும், அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்பவனாகவும் இருக்கின்றேன்.

ஆயினும் பாருங்கள்.. தோழர்களே, நான் சில சமயங்களில் உபரியான நோன்புகளை நோற்கின்றேன். சில சமயங்களில் நோற்காமலும் இருக்கின்றேன்.

அதேபோல, இரவு காலங்களில் நான் உபரியான தொழுகைகளைத் தொழுகின்றேன். தூங்கவும் செய்கின்றேன்.

இன்னும் பாருங்கள் தோழர்களே, நான் மணம் முடித்தும் உள்ளேன்.

எனவே, எனது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்தான் உங்களுக்கு நன்மையுண்டு!" - என்று அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்துகின்றார்கள்.

 என்ன அற்புதமான அறிவுரைப் பாருங்கள்!

'மிதமான வாழ்வியலே நிலைத்து நிற்கும். வெற்றியைப் பெற்றுத் தரும்!' - என்ற வாழ்வியல் தத்துவத்தை தமது தோழர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள் அன்பு நபி (ஸல்) .

நபி பெருமானரின் வாழ்வியல் கூறுகளை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கும முன் அவற்றை நாம் ஆழமாக புரிந்து கொள்ள முயல வேண்டும்.

இந்த முயற்சி இன்று முஸ்லிம் சமூகத்தைப் பிடித்தாட்டும் அனல் பறக்கும் பிரச்சினைகளிலிருந்து நம்மை தவிர்ந்து கொள்ளச் செய்யும்.

அப்போதுதான் நமது அறிவு, ஆற்றல்களை விரயமாக்காமல் ஒன்றிணைத்து இறைநெறியை .. இஸ்லாத்தை .. அடுத்தவர்க்கு கொண்டு சேர்க்கும் முக்கியப் பணியை மேற்கொள்ள முடியும்.

அதுவும் இறைசந்நிதானத்தில் ஒவ்வொருவரும் இது குறித்து பதில் சொல்ல வேண்டிய அதி முக்கிய பணி அது! அந்த பதிலில் நாம் காட்டும் சடைவு நமது புரிதலில் கோளாறா இருக்கக் கூடாது!

ஏனென்றால்.. நபி பெருமானார் தெள்ளத் தெளிவாக தமது 23 ஆண்டுகால அழைப்பியல் பணியில் சீரும் சிறப்புமாக இதை செய்து காட்டியுள்ளார்கள்.

அதற்கு இறைவனையும், லட்சக்கணக்கான நபித்தோழர் மற்றும் தோழியரையும் அரஃபா மைதானத்தில் தஙகளின் இறுதி ஹஜ்ஜில் சாட்சியாக்கி சுட்டிக் காட்டியும் உள்ளார்கள்.

---- இறைவன் நாடினால்... 'அருட்கொடைகள்' தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 5082214335085312402

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress