அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 25: 'குழந்தையைத் தீயில் எறிவாளா தாய்?'

கண்ணின் கருமணியாய் இருந்து குழந்தையைக் காப்பவள் தாய்! அவளா அந்தச் செயலைச் செய்வாள்? ஒரு காலும் செய்ய மாட்டாள்! அவளா குழந்தையை நெருப்பில் எறிவாள்? மாட்டவே மாட்டாள்!

அப்படியானால்... எண்பது தாய்மார்களின் அன்புக்கு ஈடான இறைவன் தன் அடியார்களை அவ்வளவு எளிதில் நரக நெருப்பில் எறிவானா என்ன?

சுற்றியுள்ள சூழல்களை வைத்து அந்தந்த நேரத்துக்கு ஏற்றாற் போல சிறு சிறு உதாரணங்கள் மூலமாக பெரும் பெரும் விஷயங்களைப் ப
ுரிய வைப்பது நபி பெருமானாரின் வழிமுறையாகும்.

அன்றும் அப்படிதான் நடந்தது. எவ்வளவு அழகிய நயம் மிக்க உதாரணம் காட்டி தமது தோழர்களுக்கு அறிவுரை பகர்கிறர்கள் நபி பெருமானார்!

இதோ காட்சிக்குள் நுழையுங்கள்.. இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..'

அன்று நபிகளாரின் திருச்சமூகத்தில் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் கைக்குழந்தையைப் போர்முனையில் இழந்த பெண்ணும் ஒருத்தி!

தாய்ப் பாசத்தால் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தெருவில் செல்லும் குழந்தைகளை எல்லாம் 'தன் குழந்தை ' என்று எண்ணி ஓடோடிச் சென்று அரவணைத்தவாறு இருந்தாள்.

இதைக் கண்ட நபிகளார் கனத்த இதயத்தோடு தம் தோழர்களிடம் அதைச் சுட்டிக் காட்டினார்கள். சொன்னார்கள்: "தோழர்களே, இவள் தன் குழந்தையை தானே முன்வந்து சுயமாக நெருப்பில் எறிந்து விடுவாள் என்று எண்ணுகின்றீர்களா?"

"இல்லை.. இறைவனின் தூதரே, ஒரு காலும் அவள் அப்படி செய்யமாட்டாள்! எதேச்சையாக கூட குழந்தை நெருப்பருகே செல்லவும் அவள் ஒப்பமாட்டாள்!" - என்றார்கள் ஒரே குரலில்.

"இப்பெண்ணுக்குத் தன் குழந்தையின் மீதிருக்கும் பாசத்தைவிட பன்மடங்கு பாசம் தன் அடியார்களிடம் இறைவனுக்கு உள்ளது!" - என்ற நபிகளார் இறைவனின் கருணையைக் குறித்தும், அவன் எளிதில் யாரையும நரகில் எறிய மாட்டான் என்பதையும் விளக்குகிறார்கள்.


"இறைவனின் மன்னிப்பு வானங்கள்-பூமியின் அளவுக்கு விசாலமானது!" - (3:133) என்கிறது இதை திருக்குர்ஆன்.

"பகலில் பாவம் புரிந்தோர் பாவமன்னிப்புக் கேட்டு அவர்கள் மன்னிப்பு பெரும் விதமாக இறைவன் தன் கரங்களை இரவில் விரித்திருக்கின்றான்.

இரவில் பாவம் புரிந்தோர் பாவமன்னிப்புக் கேட்டு அவர்களை மன்னிக்கும் விதமாக இறைவன் தன் கரங்களை பகலில் விரித்திருக்கின்றான்!" - என்று இறைவனின் கருணையையும், மன்னிக்கும் குணத்தையும் விளக்குகிறார்கள் நபிகளார்.

பாவமன்னிப்புப் கேட்டு மனம் திருந்தும் பட்சத்தில் நிராசை அடையத் தேவையில்லை!

           

- இறைவன் நாடினால்.. 'அருட்கொடைகள்' தொடரும்..

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 7109111583629821517

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress