அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 28: 'சுகமான சுமை!'

<<<<<<இந்தியா முதுமையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

<<<<<<நாட்டு மக்கள் தொகையில் கிட்ட தட்ட 77 மில்லியன் பேர் முதியவர்கள்!

<<<<<<25 ஆண்டுகளில் இது இன்னும் 177 மில்லியனை எட்ட இருக்கிறது.

<<<<<<இந்தியனின் சராசரி ஆயட்காலம், 1951 – ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 40 ஆண்டுகள்.

<<<<<<இந்த ஆயுட்காலம் தற்போது 64 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது அதாவது முதுமையின் ஆயுட்காலம் நீடித்துள்ளது.

<<<<<<இந்தியனின் கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் உலக சுகாதார நல அமைப்பினர் திரட்டியதாகும்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல்களிடையே இன்றைய ‘அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை..! – இல், நபிகளாரின் அறிவுரையைக் கேட்போமா?





பெற்றோர் பெரும் சுமையாகக் கருப்படும் சமூக அமைப்பை நோக்கி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்ற காலமிது.

பெற்றோர் தம் பிள்ளைகளை வளமாக உருவாக்க செய்யும் அர்ப்பணங்கள் அளப்பறியவை. அதிலும், தாயின் தியாகத்தைச் சுட்டிக்காட்ட உலகில் வேறு வார்த்தைகளே இல்லை.

ஒருமுறை முஹம்மது நபிகளாரை (ஸல்) அணுகி ஒருவர் கேட்டார்: “இறைவனின் தூதரே, எனக்கு வயது முதிர்ந்து தாய் இருக்கின்றார். அவருக்கு தினமும் நான் உணவூட்டி விடுகின்றேன். குடிக்க நீர் எடுத்து வைக்கின்றேன். இயற்கை உபாதைகள் தீர்க்க உதவுகின்றேன். இவைகள் மூலமாக நான் என் தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவு செய்தவன் ஆவேனா?"

"இல்லை!" - என்று நபிகளார் பதில் அளிக்கிறார்கள்.

"தோழரே, உன் தாய் உனக்கு இதைவிட அதிகமாகப் பணி விடை செய்திருக்கிறார்!" – என்கிறார்கள்.

இன்னொரு சமயம், "முதுமைப் பருவத்தில் தன் தாய்-தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் அவர்களுக்குப் பணிவிடை செய்து சுவனம் புகாதவன் நாசமாகப் போகட்டும்!" – என்று கடிந்து கூறுகிறார்கள்.




பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு பிறகு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சிலவற்றையும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.

அவை:

>>>> பெற்றோரின் பிழைப் பொறுக்க இறைவனிடம் >>>>>பாவமன்னிப்புக் கோரல்,
>>>>>பெற்றோரின் மரணசாசனத்தை நிறைவேற்றல்,
>>>>>பெற்றோரின் உறவு-முறைகளைத் துண்டிக்காமல் வாழ்தல்,
>>>>>பெற்றோரின் நண்பர்களுக்கு கண்ணியம் அளித்து உபசரித்தல்.

ஒவ்வொரு மனிதனும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இவை.

                         -0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

-- - - இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 5595479676545498352

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress