அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 29: 'மக்களின் அனுமதி கேட்ட ஜனாதிபதி!'
https://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_5.html
ஒரு
விசித்திரமான தலைவர்களை, ஆட்சியாளர்களை நபிகளார் தங்களுக்குப் பின் இந்த
மண்ணுலகில் விட்டுச் சென்றார்கள்! இஸ்லாமிய பேரரசின் அதிபர்கள் ஒட்டுப்
போட்ட சட்டையை அணிந்தார்கள்!
வார் அறுந்துப் போன காலணிகளை தாங்களே தைத்துக் கொண்டார்கள். நோய்த் தீர்க்க அரசு கஜானாவிலிருந்து சிறிதளவு தேனைக் கூட மக்கள் அனுமதியுடன்தான் பெற்றார்கள்!! நினைக்கவே பிரமிக்க வைக்கும் உதாரணங்கள்.
நம்மைச் சுற்றியும் ஊழல் கறைப் படிந்து போன தலைவர்கள் மத்தியில் அற்புதமான ஆளுமைப் பண்பாளர்களாக திகழந்த இத்தகையவர்கள் நம் மண்ணில் அரசாளப் போவது எப்போது? வாருங்கள் இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்.. ஒரு ஜனாதிபதியின் முறையீடு என்னவென்று கேட்போம்..!

ஒரு முறை ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) நோயுற்றார்கள்.
"தேன் பயன்படுத்தினால்.. நோய் நீங்கும்!"- என்று மருத்துவர் ஆலோசனை கூறினார்.
வீட்டிலோ தேன் இல்லை. ஆனால், அரசாங்க கருவூலத்தில் வேண்டிய மட்டும் தேன் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.
மக்கள் அனுமதியின்றி அதை ஜனாதிபதி பயன்படுத்தக் கூடாது!

அதனால், ஜனாதிபதி அவர்கள் மஸ்ஜிதுன் நபவி - பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.
தன் நிலையை விளக்கி மக்களிடம், "மக்களே, நீங்கள் அனுமதி அளித்தால்...
கருவூலத்திலிருந்து சிறிது தேனை எடுத்து நான் எனது நோய்க்காக பயன்படுத்த
முடியும்!" - என்று அனுமதி வேண்டி நின்றார்கள்.
மக்கள் தங்கள் ஜனாதிபதியின் கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்று அனுமதி அளித்தார்கள்.
மக்கள் தங்கள் ஜனாதிபதியின் கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்று அனுமதி அளித்தார்கள்.
ஜனாதிபதி விரும்பியிருந்தால்.. தேனை மட்டுமல்ல.. வேறு எந்தப் பொருளையும்
யாருடைய அனுமதியும் இல்லாமல் எடுத்து பயன்படுத்தியிருக்க முடியும்.
ஆனால், உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்கள் இச்சம்பவத்தின் மூலமாக மக்களின் அனுமதியின்றி பொதுச் சொத்தைப் பயன்படுத்த ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக உணாத்தினார்கள்.
- இறைவன் நாடினால்... இறையருள் தொடரும்.