ஒரு சொல்: 'செயல்களின் அடிப்படையில் பெரும் வேற்றுமை'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_29.html
முஸ்லிமுக்கும்,
‘காஃபிர்’ எனப்படும் இறைநிராகரிப்பாளனுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேற்றுமை என்ன?
இதற்கு ஒரே பதில்தான்
இருக்கிறது; “இவ்விருவருக்குமுள்ள அடிப்படையான வேற்றுமை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாலும்
அதனை ஏற்க மறுப்பதாலுமே ஏற்படுகிறது!"
இஸ்லாம் என்றால்..
'இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்று பொருள்'. இஸ்லாத்தை மறுப்பது
அல்லது இறைவனை நிராகரிப்பது என்றால் இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பது என்று பொருள்.
முஸ்லிமும், காஃபிரும் மனிதர்கள்தான். பௌதீக அமைப்பில் இருவரும்
இறைவனின் அடிமைகள்தான்! என்றாலும், இவர்களில் ஒருவர் தன்னுடைய அதிபதியை அறிகிறார்.
அவன் இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கிறார். அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படும்
தீய விளைவுகளுக்கு பயப்படுகிறார்; எனவே அவருடைய தகுதி உயர்கிறது. மற்றொருவர் தன்னுடைய
அதிபதியைத் தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொண்டும் அவனை தன் அதிபதியாக ஏற்க மறுக்கின்றான். இதன் விளைவாக இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிவதில்லை. இதனால், அவனுடைய
தகுதி தாழ்கிறது.
இப்படிப் பார்க்கும்போது,
முஸ்லிமைப் பொறுத்தமட்டில் அவனுடைய செயல்களின் அடிப்படையில் இறைவன் மகிழ்கிறான். இறைநிராகரிப்பாளனைப் பொறுத்தமட்டில்
இறைவன் வெறுப்படைகின்றான். முஸ்லிமுக்குச் சொர்க்கத்தைத் தருவதாக வாக்குறுதியளிக்கின்றான்.
இறைநிராகரிப்பாளனை நோக்கி, “உன்னை நரகில் வீசி எறிவேன்!” – என்று அச்சுறுத்துகின்றான்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

