ஒரு சொல்: 'வேற்றுமைத் தரும் இரண்டு'



முஸ்லிமுக்கும், இறைநிராகரிப்பாளனுக்கும் இடையில் வேற்றுமையைத் தோற்றுவிக்கக் கூடியவை இரண்டு. ஒன்று அறிவு. மற்றது செயல்.

அதாவது தன்னைப் படைத்து பரிபாலிக்கும் அதிபதி யார்? அவனுடைய கட்டளைகள் என்ன? அவனுடைய விருப்பத்தின்படி வாழ்வது எப்படி? எந்த செயல்களை அவன் விரும்புகின்றான்? எந்த செயல்களை எல்லாம் அவன் வெறுக்கின்றான்? என்பதை முதலில் மனிதன் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 

இந்தத் தெளிவு ஏற்பட்ட பிறகு அவன் செய்ய வேண்டிய அடுத்த பணி இதுதான்: “ஒரே இறைவனுக்கு அடிபணிந்தவனாய் அவன் திகழ வேண்டும். தன்னுடைய விருப்பு, வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தனது அதிபதியின் உவப்பைக் குறியாகக் கொண்டு வாழ வேண்டும். 

தன்னுடைய உள்ளம் விரும்புகின்ற செயல் ஒன்றை இறைவனின் கட்டளை மறுக்கிறது என்றால், தன்னுடைய விருப்பத்தை அலட்சியம் செய்துவிட்டு இறைவனின் கட்டளைக்குப் பணிய வேண்டும். 

தனக்கு நல்லது என்று தோன்றக்கூடிய ஒரு செயலை அவடைய அதிபதி கெட்டது என்று சொல்கிறான் என்றால், அதனை அவன் கெட்டது என்றே கருத வேண்டும். தனக்குக் கெட்டது என்று தோன்றக் கூடிய மற்றொரு செயலை அவனுடைய எஜமானன் நல்லது என்று சொல்கிறான் என்றால் அதை நல்லது என்றே கொள்ள வேண்டும். 

ஒரு செயல் தனக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அவனுடைய அதிபதி அதனைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகின்றான். அந்தச் செயலில் உயிருக்கும், பொருளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் அதனை அவன் செய்தே தீர வேண்டும். 

மற்றொரு செயல் தனக்கு நன்மை தரும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், அவனுடைய அதிபதி அதைச் செய்யக்கூடாது என்று கட்டளையிடுகின்றான். அந்தச் செயலினால் உலகம் முழுவதிலுள்ள செல்வமெல்லாம் கிடைப்பதாயிருந்தாலும் அதனை அவன் அறவே செய்யக்கூடாது.

இந்த அறிவினாலும், செயலினாலும்தான் முஸ்லிம் இறைவனின் அன்புக்கு உரிய அடிமையாகின்றான். இறைவனின் பேரன்பு அவன் மீது பொழிகிறது. இறைவன் அவனுக்குக் கண்ணியத்தைக் கொடுக்கின்றான். 

இறைநிராகரிப்பாளனுக்கு இந்த அறிவு கிடையாது. அறிவு இல்லாத காரணத்தினால் அவனுடைய செயல்கள் இந்த அடிப்படையில் அமைவதில்லை. எனவே, அவன் இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாத மூடனாய்.. இறைவனின் வெறுப்புக்கு உரியவனாயும் இருக்கின்றான். இறைவனுடைய பேரன்பும் என்னும் 'அருள்வளம்' அவனுக்குக்க கிடைக்காமல் போய்விடுகின்றது.

- மௌலானா மௌதூதி (ரஹ்)
 

Related

ஒரு சொல் 255991202260813541

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress