ஒரு சொல்:'வழி வழி சொத்தல்ல இஸ்லாம்'



தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர், முஸ்லிம் அல்லாத ஒருவரைப் போல தனது இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளாமலும், அவனுடைய கட்டளைக்கு அடிபணியாமலும் இருக்கிறார் என்றால்.. பெயர், உடை,உணவு போன்றவை மாறுபட்டிருப்பதால் மட்டுமே அவர் நிராகரிப்பாளனைவிட  எந்த விதத்தில் சிறந்தவராக முடியும்? எதன் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பேரன்புக்கு உரித்தவராகத் திகழ முடியும்?

இஸ்லாம் என்பது குடும்ப ரீதியாகவோ, பரம்பரை ரீதியாகவோ வழிவழியாய் கிடைக்கின்ற மூதாதையர் சொத்தல்ல. அது தநதையிடமிருந்து மகனுக்கும், மகனிடமிருந்து பேரனுக்கும் தானாகவே கிடைக்கவும் கிடைக்காது.

பிராமணருக்குப் பிறந்த ஒருவன் எவ்வளவு அறியாமையோடு இருந்தாலும், எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் உயர்ந்தவனாகவே கருதப்படுவான். ஏனென்றால் அவன் பிராமணர் வீட்டில் பிறந்தவன். எனவே அவன் உயர் வகுப்பினனாகவே வழங்கப்படுகின்றான். 

ஆனால், தாழ்த்தப்பட்டவருக்குப் பிறந்த ஒருவர் பிராமணரைவிட எவ்வளவுதான் அறிவிலும், செயலிலும் சிறப்புற்று விளங்கினாலும் அவர் பிராமணரைவிட தாழ்ந்தவராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் பிறந்தது தாழ்த்தப்பட்டவரின் வீட்டில். ஆனால், இவையெல்லாம் இஸ்லாத்தில்  பொருந்தாது. அதை இறைவன் திருக்குர்ஆனில் இப்படி தெளிவு படுத்திவிட்டான்:

“உண்மையில், கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தான்!” ((49:13)

- மௌலானா மௌதூதி (ரஹ்) 
 

Related

ஒரு சொல் 6116401557240337145

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress