ஒரு சொல்: 'இந்த பின்விளைவுகள்!'


பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும். லஞ்சம் கொடுப்பவனையும், வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாக இறைவன் குறிப்பிடுகின்றான். வட்டி கொடுப்பவனையும், வாங்குபவனையும் மிக மட்டமான குற்றவாளிகள் என்று அவன் தீர்ப்பு வழங்கியிருக்கின்றான். புறம்பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவது போன்றது என்று தெளிவாக அறிவுறுத்தியிருக்கின்றான். கெட் பேச்சு, வெட்கங்கெட்ட செயல், தரக்குறைவான நடத்தை ஆகியவற்றுக்குக் கொடிய தண்டனை உண்டு என்று அவன் குறிப்பிட்டுக்கிறான்.

இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும், இறைவனுடைய அச்சம் நமக்கு அறவே இல்லை என்பதைப் போல நாம் இந்தச் செயல்கள் அனைத்தையும், மற்றவரைப் போலவே தயங்காமல் … தாராளமாகச் செய்கிறோம். 

இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெனில், நாம் மற்றவரைக் காட்டிலும் கொஞ்சம் முஸ்லிமாக இருப்பது போல காட்சி அளித்தாலும் சரியே, நமக்கு இறைவனிடமிருந்து பரிசளிப்பு ஏதும் கிடைக்காது! மாறாக, தண்டனைதான் கிடைக்கும். 

மற்றவர்கள் நம் மீது அதிகாரம் செலுத்துவது,  எல்லா வழிகளிலும் நம்மை அவர்கள் தாழ்த்துவது இதே குற்றத்தால் ஏற்பட்ட விளைவுகள்தான்! 

காரணம் இஸ்லாம் என்ற அருட்பேறு நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் நாம் அதனை மதிக்கத் தவறிவிட்டோம்!

- மௌலானா மௌதூதி (ரஹ்)
 

Related

ஒரு சொல் 4169392437509164465

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress