ஒரு சொல்: துன்பங்கள் சூழ காரணங்கள் என்ன?'


நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் நம்மை ஏன் சூழ்ந்து கொண்டிருக்கின்றன? 

'காஃபிர்கள்' அதாவது இறைவனை ஏற்க மறுப்பவர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோமோ அவர்கள் நம்மைவிட எல்லாவிதத்திலும் ஏன் மேலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடைய சட்டத்துக்குப் பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?
 
இந்த வழியில் நாம் அனைவரும் சிந்தித்தால் நமது நம்பிக்கையும் வளர்ந்து கொண்டே போகும்.

பெயர் ரீதியான அடிப்படையைத் தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. 

இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமில்லாமல் இருப்பது, இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது ஆகிய செயல்களில் மற்றவரைப் போலவே நாமும் குறைபாடுகள் கொண்டவர்களாகவே இருக்கிறோம். மற்றவர்களுக்கும், நமக்கும் இடையில் சின்ன சின்ன வேற்றுமைகள்தான் (பெயர்கள், உணவு, உடை, சடங்கு – சம்பிரதாயங்கள்) உண்டு. இந்நிலையில் இறைவனிடத்தில் நற்கூலிக்கான உரிமை எப்படி கொண்டாட முடியும்? இன்னும் சொல்லப் போனால்.. தண்டனையைத்தான் நாம் பெற வேண்டியவர்களாக இருப்போம். 

அதற்கான காரணம் இதுதான்: “திருக்குர்அன் இறைவன் அருளிய திருவேதம் என்று நமக்கு தெரியும். ஆனால், ஒரு நிராகரிப்பாளனைப் போன்றே நாமும் அந்த வான்மறையிடம் நடந்து கொள்கிறோம்.

திருநபிகள் இறைவனுடைய திருத்தூதர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், மற்றவர்கள் திருநபிகளாரின் கட்டளைகளைப் புறக்கணிப்பது போன்றே நாமும் புறக்கணித்துவிடுகின்றோம். திருநபிகளாரின் வழிமுறைகளிலிருந்து விலகிச் செல்கிறோம்.

 - மௌலான மௌதூதி (ரஹ்)
 
 

Related

ஒரு சொல் 1355055388936763175

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress