ஒரு சொல்:'இதைவிட பேரிழப்பு இருக்க முடியுமா?'
https://udayathaaragai.blogspot.com/2013/10/blog-post_13.html
குழந்தை ஒன்று
அழுது அடம்பிடிக்காதவரை, அதன் தாய் அதற்கு பால் ஊட்டுவதில்லை. தாகம் ஏற்படும்போதுதான்
மனிதன் தண்ணீரைத் தேடி ஓடுகின்றான். அப்போது, அம்மனிதனுக்காக இறைவனும் தண்ணீருக்கான
ஏற்பாடுகளைச் செய்து தருகின்றான்.
உங்களுக்குத் தாகமே
இல்லாதபோது, நிறைந்த நீருடன் கூடிய கிணறு உங்களிடம் வந்தாலும், அதனால் எந்த பயனும்
ஏற்படாது. மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பது எத்துணைப் பெரிய தீங்கு
என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இறைவனுடைய நூல் உங்களிடம் இருக்கிறது.
ஆனால், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிட பெரிய இழப்பு வேறு என்னவாக இருக்க
முடியும்?
நீங்கள் தொழுகிறீர்கள்.
ஆனால், அந்த தொழுகையில் நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத்
தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் ஒன்று உண்டா?
இன்னும் சொல்லப்போனால் எந்தக் 'கலிமாவை
– சத்திய வாக்குமூலத்தைக்' கூறி இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறீர்களோ, அதற்கான பொருள் என்ன
என்றுகூட உங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு முஸ்லிமுக்கு இதைவிட பெரிய நஷ்டம் இருக்க முடியுமா?
- மௌலானா மௌதூதி (ரஹ்)

