ஒரு சொல்:'நன்றாக நினைவில் வையுங்கள்!'


கெட்ட கலிமாவை ஏற்றுக் கொண்டவர்கள் செழித்தோங்கிக் கொண்டிருக்கிறார்கள் (வளமுடன் இருக்கிறார்கள்) என்று நீங்கள் சொல்வதும் தவறுதான். கெட்ட கலிமாவை ஏற்றுக் கொண்டவர்கள் ஒருக்காலும் செழித்தோங்குவதில்லை. இன்றும் அவர்கள் செழித்தோங்கிக் கொண்டிருக்கவில்லை. அவர்களது செல்வ வளத்தையும், வாழ்க்கை வசதிகளையும், வெளிப்படையான செல்வாக்கையும் பார்க்கும் நீங்கள் அவர்கள் செழித்தோங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தீர்மானிக்கிறீர்கள்.

ஆனால், அவர்களிடையே எத்தனை பேர் மனநிறைவோடு இருக்கிறார்கள்? என்று அவர்களுடைய உள்ளங்களைக் கேளுங்கள்! அவர்களிடம் வாழ்க்கை வசதிகள் நிறைந்துதான் இருக்கின்றன. ஆனால், அவர்களின் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அவர்களை எந்த நேரத்திலும் அமைதி பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இறைவனின் சட்டத்திற்கு அவர்கள் செய்யும் முரண்பாடு அவர்களின் வீடுகளை நரகங்களாக்கி வைத்திருக்கிறது. 

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தற்கொலைகள் எவ்வளவு அதிகமாக இருக்கின்றன! விவாகரத்துக்கள் எப்படி மலிந்து கிடக்கின்றன. அவர்களது சந்ததிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அவை மேலும் திட்டமிட்டு குறைக்கப்பட்டும் வருகிறது! கொடிய நோய்கள் லட்சக்கணக்கில் மனிதர்களின் வாழ்க்கையை எப்படிச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன! பல தரப்பட்ட வகுப்பாரிடையே உணவுப் பிரச்னையில் எப்படி சச்சரவுகள் தோன்றியிருக்கின்றன! பொறாமையும், சினமும், பகைமையும் ஒரு இனத்து மக்களை எப்படித் தமக்குள்ளேயெ சண்டை போட வைத்திருக்கின்றன! ஆடம்பர மோகம் மனித வாழ்வை எவ்வளவு தூரம் கசப்பாக்கி வைத்திருக்கின்றது! இவற்றை எல்லாம் நீங்கள் ஊடகங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

சிறப்பு மிக்க இந்தப் பெரிய நகரங்களைத் தூரத்திலிருந்து பார்க்கும் மனிதன், அவற்றைப் பொறாமைப்படத்தக்க சொர்க்கங்கள் என்று நினைக்கின்றான். ஆனால், அவற்றிற்குள்ளேயே லட்சக்கணக்கான மனிதர்கள் எவ்விதத் துன்ப வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மனிதர்கள் செழித்தோங்கி யிருக்கிறார்கள் என்று கூறுவது இதைத்தானா? பொறாமைக் கண் கொண்டு நீங்கள் பார்க்கிற சொர்க்கம் இதுதானா?

எனது அன்புக்குரிய சகோதரர்களே! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இறைவனுடைய சொல் என்றைக்கும் பொய்யாக முடியாது. உண்மையில், கலிமா தய்யிபாவை விடுத்து வேறு எந்தக் கலிமாவைப் பின்பற்றினாலும், மனிதனுக்கு இம்மையில் மகிழ்ச்சியும், மறுமையில் வெற்றியும் கிடைக்க முடியாது. எந்த திசையில் வேண்டுமானாலும் பார்வையைச் செலுத்திப் பாருங்கள், இதற்கு முரண்பட்ட வித்தில் எதுவும் எங்கும் கிடைக்க முடியாது!

- மௌலானா மௌதூதி (ரஹ்)

 

Related

ஒரு சொல் 5930055534509483656

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress