பொன்னேடுகள்: 'மனித சமூகத்தின் விடுதலை'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_18.html
சத்தியப் பாதையில் போராடுபவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். சத்தியத்தின் வழியில் தொடர்ந்து நடப்பதை நவீன தெய்வங்களான தாகூத்திய சக்திகளால் தடுக்க முடியவில்லை. அதேபோல, அந்த தீய சக்திகள் அழைப்பாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சித்திரவதைகளும் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
ஒருவர் தர்க்க ரீதியான வாதங்களால் சொற்கோட்டைக் கட்டலாம். ஆட்சி, அதிகார, ஆதிக்கம் இருக்கும் ஒரே காரணத்தால் கண்மூடித்தனமான தண்டனைகளை தரலாம். ஆனால், இறையச்சமுள்ள மனிதனை ஒருகாலும் அவர்கள் தவறான வழியில் செலுத்திட முடியவே முடியாது.
நேரான பாதை என்பது இறைவனும், அவனது திருத்தூதரும் காட்டிய பாதையாகும். தவறான பாதைகள் பல நூறு இருக்கின்றன. ஷைத்தான் ஆயிரக்கணக்கான வழிகளில் மக்களை வழிகெடுக்கக் கூடியவன். ஆனால், நேரிய பாதை ஒன்றே ஒன்றுதான் என்றும், அதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், ஏனைய பாதைகளை தவிர்த்திடல் வேண்டும் என்பதையும் திருமறை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
நவீன உலகின் மனித சமூகத்தை அவர்களைப் பீடித்துள்ள அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றால், அவர்கள் திருக்குர்ஆனையும், திரு நபிகளாரின் வழிமுறைகளையும் பின்பற்றி நடப்பதிலேயே உள்ளது.
- ஜைனப் அல் கஸ்ஸாலி

