ஒரு சொல்: 'மந்திரத்தால் மாங்காய் விழுமா?'


கலிமா என்னும் ஓர் உறுதிமொழியைச் சொல்வதன் மூலம் மனிதன் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் நுழைகின்றான் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்தக் கலிமாவும் அப்படியொன்றும் நீளமானதல்ல. சில வார்த்தைகள் மட்டுமே கொண்டது. "லா இலாஹ இல்லல்லாஹீ, முஹம்மதுர் ரஸீலுல்லாஹி" இந்த வார்த்தைகளை மனப்பூர்வமாய்க் கூறியவுடன் மனிதனின் நிலை ஏதோ ஒரு விதத்தில் மாறிவிடுகிறது.

முதலில் இறைநிராகரிப்பாளனாக இருந்த அவன் இப்போது முஸ்லிமாகி விட்டான். முதலில் இறைவனின் சினத்துக்கு இலக்காகி இருந்தவன் இப்போது இறையன்புக்கு உரியவனாகிவிட்டான். முதலில் நரகத்துக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்தவனுக்கு தற்போது சுவனத்தின் கதவு திறந்துவிட்டது. 

விஷயம் இத்துடன் முடியவில்லை. அந்த கலிமாவைக் கூறுவதால் ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் இடையில் பெரும் வேற்றுமை ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கலிமாவை கூறுகிறவர்கள் ஒரு சமுதாயத்தவராகவும், கூற மறுக்கிறவர்கள் வேறு சமுதாயத்தவராகவும் மாறிவிடுகிறார்கள். 

'லாம், அலிஃப், ஹே, மீம், தால், ஸீன்' ஆகிய சில எழுத்துக்கள் மட்டுமே கலிமாவில் இருக்கின்றன. அவற்றை ஒன்றாகச் சேர்த்து வாயால் சொல்லிவிட்டால் மனிதனின் அடிப்படையையே உலுக்கும் வகையில் ஏதேனும் 'மாயா ஜாலம்' நிகழ்ந்துவிடுகிறதா? மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் இதனால் மட்டும் வானத்திற்கும், பூமிக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுவிட முடியுமா?

சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள். 

வாயைத் திறந்து, நாவை அசைத்துச் சில எழுத்துக்களைச் சொல்லி விடுவதால் மட்டும் இத்தனைப் பெரிய விளைவு ஏற்பட்டுவிட முடியாது என்று உங்கள் பகுத்தறிவே சொல்லிவிடும்.

- மௌலானா மௌதூதி (ரஹ்)

Related

ஒரு சொல் 7033810073490285395

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress