ஒரு சொல்: 'மலைக்கும் மடுவுக்குமான அந்த வேறுபாடு..'


வெறும் ஆறேழு வார்த்தைகள் சொல்வதால் மட்டும் இறைவனை நிராகரிப்பவன் முஸ்லிமாகவும், இறைவனால் வெறுக்கப்பட்டவன் அதே இறைவனின் பேரன்புக்குரியவனாகவும், நரகத்துக்குச் செல்ல வேண்டியவன் சொர்க்கத்துக்கு உரிமைப் பெற்றவனாகவும் மாறிவிட முடியாது. 

அப்படியானால், மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் அந்த மாபெரும் வேறுபாடு எப்படிதான் நிகழ்கிறது?

இதைப் பற்றி தெரிந்து கொள்ள முதலில் கலிமாவின் பொருள் என்ன என்பது  தெரிய வேண்டும். அந்த பொருள் உள்ளத்தில் இறங்கியதும் அதனை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நாவினால் உச்சரிக்கும் போது, உங்களைப் படைத்த இறைவனுக்கு முன்னால், அகில உலகங்களின் அதிபதிக்கு முன்னால், சர்வ வல்லமையுள்ள அந்த பரம்பொருளுக்கு முன்னால் எத்தனைப் பெரிய வாக்குறுதி அளிக்கிறீர்கள்? அந்த வாக்குறுதியால் எத்தனைப் பெரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்படுகிறது? என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். 

பொருளுணர்த்தும் இத்தகைய செயல் ரீதியான 'கலிமா' வாயிலிருந்து சொல்லாக வெளிப்படும் போது, எண்ணங்களும், அந்த எண்ணங்களின் அடிப்படையிலான வாழ்க்கையும் அந்த கலிமாவின் ஆளுகைக்குள் வந்து விடும். அதன்பின், அந்தக் கலிமாவுக்கு முரண்பட்ட எந்தக் கொள்கையும், சித்தாந்தமும் உங்கள் மூளைக்குள், இதயத்துக்குள் நுழைவதற்கான வாய்ப்பேயில்லை!

அந்தக் கலிமாதான் சத்தியம் என்றும், அதற்கு எதிரான அத்தனை சொற்களும் - கலிமாக்களும் பொய்யானவை என்றும் திட்டவட்டமாக தீர்மானமாகிவிடும். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அந்தக் கலிமாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கும். 

கலிமா எனப்படும் அந்தச்  சொற்றொடரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டபின், நிராகரிப்பாளனைப் போல நினைத்ததைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்காது. மாறாக, அந்தக் கலிமாவுக்கு பணிந்து நடக்க வேண்டிய நிலையில் நீங்கள் இருப்பீர்கள். 

கலிமா சொல்வதை செய்ய வேண்டும்; கலிமா மறுப்பதை தவிர்த்துவிட வேண்டும். 

இப்படி கலிமா செயலாக்கம் பெறும்போதுதான் ஒருவன் முஸ்லிமாகின்றான். ஆரம்பத்தில் கண்டதைப் போல மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் ஏற்படுகிறது.

- மௌலானா மௌதூதி (ரஹ்)


Related

ஒரு சொல் 5123200918719158687

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress