ஒருசொல்:'இவன்தான் முஸ்லிம்!'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_22.html
"உண்மையை மிகத் தெளிவாகக் காண்பிக்கும் வசனங்களை நாம் இறக்கியருளியிருக்கிறோம். மேலும், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான்"
"அல்லாஹ்வின்
மீதும், தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், கீழ்ப்படிதலை
ஏற்றுக் கொண்டோம்!" என்று இவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், இதன் பின்னர் இவர்களில் ஒரு பிரிவினர் - கீழ்ப்படியாமல் - புறக்கணித்து விடுகின்றார்கள். இத்தகையோர் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர். அவர்களுக்கிடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளித்திட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அவர்கள் அழைக்கப்படும்போது அவர்களில் ஒருசாரர் புறக்கணித்துச் செல்கின்றார்கள். ஆனால், நியாயம் அவர்களுக்கு சாதகமாக அமையும்போது தாழ்மையோடு இறைத்தூதரிடம் வருகின்றார்கள். அவர்களின் உள்ளங்களில் - நயவஞ்சகப் - பிணி தொற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அவர்கள் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநீதி இழைத்திடுவார்களோ என்று அஞ்சுகின்றார்களா?
உண்மை என்னவென்றால், இவர்களே கொடுமையாளர்கள் ஆவர். இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, "நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!" என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும். இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்.
எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்!" (24:46-52)
இந்த வசனங்களில் இறைநம்பிக்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் குறித்துச் சிந்தனை செய்யுங்கள். அடிப்படையான இறைநம்பிக்கை இதுதான்:
இந்த நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால் அவன்தான் முஃமின், முஸ்லிம். இந்த நிலை ஒரு மனிதனுக்கு இல்லை என்றால் அவன் தகுதி 'முனாஃபிக்' எனப்படும் நயவஞ்சகனின் தகுதியைவிட சிறிதும் உயர்ந்ததல்ல.
- இறைமறை மற்றும் இறைத்தூதரின் அறிவுரைகள் ஆகியவற்றிடம் உங்களை நீங்களே ஒப்படைத்து விடுங்கள்.
- அங்கிருந்து என்ன கட்டளை புறப்பட்டாலும் அதற்குத் தலை சாய்த்து விடுங்கள்.
- அதற்கு எதிரான யாருடைய பேச்சையும் கேட்காதீர்கள். உங்கள் மனத்துக்கோ, குடும்பத்தாருக்கோ, உலக மக்களுக்கோ செவி சாய்க்காதீர்கள்!
இந்த நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விட்டால் அவன்தான் முஃமின், முஸ்லிம். இந்த நிலை ஒரு மனிதனுக்கு இல்லை என்றால் அவன் தகுதி 'முனாஃபிக்' எனப்படும் நயவஞ்சகனின் தகுதியைவிட சிறிதும் உயர்ந்ததல்ல.
- மெளலானா மௌதூதி (ரஹ்)

