ஆன்மிகச் சிந்தனை: 'ஜனாதிபதியைப் பெயர் சொல்லி அழைத்தவர்!'


ஒருமுறை. 

ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டார்.
 
வழியில் கஅபாவில் தங்க வேண்டி வந்தது.

ஜனாதிபதியை தரிசிக்க மக்கள் நாலாபுறத்திலிருந்தும் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டத்திலிருந்து யாரோ, “ஹாரூன்..! ஹாரூன்..!” – என்று அழைக்கும் குரல் கேட்டது.

இப்படி அநாகரிகமான முறையில் ஜனாதிபதியைப் பெயர் சொல்லி அழைப்பது யார் என்று எல்லோரும் பார்த்தார்கள்.

அங்கே இறைநேசர், ‘ஷா பஹ்லூல்’ சோகமாக நிற்பதைக் கண்டார்கள்.

“அய்யா பெரியீர்! என்ன வேணும் தங்களுக்கு?” – என்று ஹாரூன் ரஷீத் அவரிடம் பணிவுடன் கேட்டார்.

“ஹாரூன்! இறைவன் மீது ஆணையாக! இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பயணம் இப்படி ஆடம்பரமாக, டாம்பீகமானதாக இருந்ததில்லை. அதனால், எளிமையைக் கடைப்பிடித்து இறையில்லத்தைத் தரிசிக்கச் செல்வதே நல்லது”

இறைநேசரின் அறிவுரையைக் கேட்டு ஜனாதிபதி அழ ஆரம்பித்தார்.
 
அதன்பின் அப்பெரியாருக்கு பரிசுப் பொருட்களைத் தர முயன்றார்.
 
ஆனால், அந்த இறைநேசரோ அவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.

“அய்யா! இன்று என்னுடன் அமர்ந்து ஒருவேளை உணவாவது உண்ண வேண்டும்!” – என்று ஹாரூன் ரஷீத் கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஷா பஹ்லூலோ, வானத்தின் பக்கம் தலையை உயர்த்தி, ‘ஹாரூன்! நானும், நீயும் இறைவனின் அடியார்கள். உனக்கு இவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தவன் எனக்கு இரண்டு வேளை உணவு கூடவா தராமல் போய்விடுவான்?” – என்று புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்.

- தினமணி ஆன்மிகச் சிந்தனைப் பகுதியில் 28.04.1995 அன்று பிரசுரமானது.

Related

ஆன்மிகச் சிந்தனை 376863854957268404

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress