அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 43: 'வாரி வாரி வழங்கினாலும் சேராது நன்மை!'

சிலர் திடீர் பணக்காரர்களாகி விடுகிறார்கள். 

கோடி.. கோடியாய் செல்வம் அவர்களிடம் புரளும்.

நியாயமான வழியில் காலமெல்லாம் உழைத்தாலும் அடையமுடியாத சமூக அந்தஸ்துகள், சுகபோகங்கள் எல்லாம் அவரது அரவணைப்பில் .. காலடியில் கிடக்கும்.



செல்வந்தராக அவர் பல குறுக்கு வழிகளைக் கையாண்டார். பலரது உரிமைகளைப் பறித்தார். இப்படி தீமைகளால் வளர்ந்த மனிதர் பின்னாளில் அள்ளி அள்ளி தான  - தர்மங்கள் செய்கிறார். கேட்பவர்க்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் தருகிறார். 

இப்படிப்பட்டவரின் செய்களால் அவரது முன்னாள் பாவங்கள் குறைத்திடுமா? நன்மைகள் சேர்ந்திடுமா?

"இல்லை!" -  என்கிறார்கள் முஹம்மது நபிகளார் (ஸல்).

"இறைவன் தீமையை, தீமையின் வாயிலாக அழிப்பதில்லை.மாறாக நற்செயல் மூலமாகவே அழிக்கின்றான்!" - என்று தெளிவு படுத்துகிறார்கள் நபிகளார். 

 நன்மைக்கான நோக்கமும், அதனை அடையும் வழிமுறையும் தூய்மையானதாகவே இருக்க வேண்டும். 

"ஊரைக்  கொள்ளையடித்து செல்வம் ஈட்டி வள்ளலாய் வாரி வழங்கினாலும் பலனில்லை!" - என்கிறார்கள் அண்ணலார்.

--- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 9141357889669445530

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress